கபசுரக் குடிநீர் கரோனாவுக்கு மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

கபசுரக் குடிநீர் கரோனாவுக்கு மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை

கபசுரக் குடிநீர் கரோனாவுக்கு மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை?


மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி


மதுரை, அக். 16- கபசுர குடிநீர் கரோனாவுக்‍கு மருந்து என ஏன் இதுவரை அறிவிக்‍க வில்லை? என மத்திய அர சுக்‍கு, உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், தான் கண்டறிந்த, 66 மூலி கைகளைக் கொண்ட இம்ப்ரோ (IMPRO) எனும் மருத்துவ பொடியை வைராலஜி துறை நிபுணர்கள் பரிசோதித்து முடி வுகளைக் அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.


அப்போது, ஆண்டுதோ றும் சித்த மருத்துவ பிரிவுக் காக மத்திய-மாநில அரசுகள், பல கோடி ரூபாய் நிதி ஒதுக் கக்கூடிய சூழலில், முறையான ஆராய்ச்சிகள் மேற் கொள் ளப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆய் வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அடிப் படையில்தான் கபசுர குடிநீர் நோய்க்கான மருந்தாக வழங் கப்பட்டு வருவதாகவும், மத் திய அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். கபசுர குடிநீர் கரோனாவுக்‍கு மருந்து என ஏன் இதுவரை அறிவிக்க வில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


எப்போதிலிருந்து கபசுர குடிநீர் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது? - எத்தனை நபர்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட் டுள்ளது? - எத்தனை பேர் இதில் குணமடைந்துள்ளனர்? என நீதிபதிகள் வினவினர். மேலும், சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய் வுகள் மேற்கொள்ளப்பட்டுள் ளது? எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்‍கல் செய்ய மத்திய அர சுக்‍கு உத்தரவிட்டனர். எந்த ஆராய்ச்சியின் முடிவில் கப சுரக் குடிநீர் வழங்கப்படுகிறது? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத் தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


No comments:

Post a Comment