சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினருமான அருமை நண்பர் சைதை மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் (வயது34) சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்னும் செய்தியறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
மகனை இழந்து வாடும் சகோதரர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவரது வாழ்விணையருக்கும், குடும் பத்தினருக்கும் நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆறுதல் பெறுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
17.10.2020
No comments:
Post a Comment