புதுச்சேரி மண்டல திராவிடர் கழக செயற்குழு கூட்டம் 24.10.2020 அன்று காலை 11 மணிக்கு மாநில தலைவர் சிவ. வீரமணி தலைமையில், மண்டல தலைவர் இர. ராஜு முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் நடந்தது. கழக பொதுச்செயலாளர் டாக்டர் துரை சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழர் தலைவர் பிறந்தநாள் மற்றும் விடுதலை சந்தா சேர்க்கை குறித்து பேசினார். தோழர்கள் ஒவ்வொரு வரும் தலா 5 சந்தா தர முன்வந்தனர். முதல் கட்டமாக 40சந்தாக்கள் வழங்கினர். தோழர்கள் கே. வி. ராஜன், குப்புசாமி, லோ. பழனி, திராவிடச் செல்வன், ஜி. கே. எம், சிவராஜன், கண்ணன், ஆறுமுகம், ராஜு, வீரமணி ஆகியோர் சந்தாக்கள் வழங்கினர். தமிழர் தலைவரின் பிறந்தநாள் அன்று குருதிக்கொடை அளித்தல் மரக்கன்றுகள் நடுதல் என முடிவு எடுக்கப்பட்டது.
Sunday, October 25, 2020
புதுச்சேரி மண்டல திராவிடர் கழக செயற்குழு கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment