பெங்களூரு அக் 24- கருநாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரு கிறது. இதனால் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது. நடப்புக் கல்வியாண்டு தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட் டன. தற்போது ஆன்லைன் வாயிலாகவும், தொலைக் காட்சி மூலமும் பாடம் நடத் தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு பாடச் சுமை ஏற்படாத வகையில் 30 சதவீதத்தைக் குறைத்து கர் நாடக மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட் டுள்ளது. எனவே எஞ்சிய 70 சதவீத பாடத்தை மட்டும் 2020-21ஆம் கல்வியாண் டிற்கு படித்தால் போதும். குறிப்பாக இயற்பியல், வேதி யியல், கணிதம் ஆகிய பாடங் களில் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை. மற்ற பாடங்களில் தான் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதில் சிபிஎஸ்இ ஆணை யத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் கர்நாடக அர சின் கல்விக்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய் யப்பட்டுள்ளது. இதற்கிடை யில் பள்ளிகளைத் தற்போ தைக்கு திறக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் அரசு அவசரப் பட வேண்டாம் என்று வலி யுறுத்தியுள்ளனர். அதேசம யம் மாணவர்களுக்கு முறை யான கல்வியை அளிக்க வேண்டுமெனில் அது நான்கு சுவர்களுக்குள் மட்டும் தான் சாத்தியம் என்று கல்வியியல் ஆர்வலர்கள் தெரிவித்துள் ளனர்.
இந்த விவகாரத்தில் மேலும் தாமதப்படுத்துவது மாணவர்களின் கற்றலில் பெரிய பாதிப்பை ஏற்படுத் தும் என்று எச்சரித்துள்ளனர். பெங்களூருவில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர் ஜெயசிறீ ஜே என் பவர் கூறுகையில், பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல் வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை காண முடிகிறது. இருப்பினும் கரோனா முழு வதுமாக ஓடிவிட்டதாக கருத முடியாது. மேற்கத்திய நாடுகளில் கரோனா இரண் டாவது அலை உருவாகியிருக் கிறது.
இதனால் மீண்டும் ஊர டங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தி யாவிலும் மத விழாக் காலம் தொடங்கியுள்ளது. விரை வில் குளிர்காலம் வேறு வர வுள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்குள் அரசு எந்தவொரு முடிவிற் கும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தீபு சி என்ற மற்றொரு பெற் றோர் கூறுகையில், அனைத்து மாணவர்களுக்கு கல்வியை அளிப்பதை அரசு உறுதி செய்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று காலத்தில் பல்வேறு முறைகளைக் கையாண்டு பாடம் நடத்தி வருகின்றனர்.
பல பள்ளிகளில் ஆன் லைன் வாயிலான கல்விமுறை சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. பல பெற் றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க விரும்பவில்லை. அதே நிலைப் பாட்டில் தான் நாங்களும் இருக்கின்றோம் என்றார். மற்றொரு பெற்றோர் கூறு கையில், கரோனா பரவல் விகிதம் ஜீரோவிற்கு வரட் டும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பதைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று வலி யுறுத்தியுள்ளார். இதற்கிடை யில் பிரபல கல்வியியல் நிபு ணர் வி.பி நிரஞ்சன் ஆரத்யா கூறுகையில், கல்வியில் சம நிலை என்பது மிகவும் முக்கி யம். குறிப்பிட்ட மாணவர் களால் ஆன்லைன் கல்வியை கற்க முடியாத சூழல் நிலவு கிறது. இதற்கு மின்சாரம், எலக்ட்ரானிக் சாதனம், உள் கட்டமைப்பு, இணைய வசதி போன்ற பல்வேறு காரணங் கள் இருக்கின்றன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக் கப்படுகிறது. இவர்களின் பெற் றோர்களும் ஏழ்மையான சூழலில் இருக்கின்றனர். இவற் றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு பற்றி அரசு சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கல்வி நிலையங்களைத் திறக்க மாநில அரசுகள் முனைந்து கொண்டு இருக்கும் போது சில மாநிலங்களில் மாணவர் களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது, இதனால் அரசுப் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்று பெங்களூர் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தது போல் நாடு முழுவ தும் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தத் துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment