எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 23, 2020

எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது


சென்னை, அக்.23  எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளி யிடப்பட்டது. தேர்வு முடிவு களின் அடிப் படையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (23.10.2020) முதல் வழங் கப்பட இருக்கிறது.


மாணவ - மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். கரோனா காரணமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழி முறைகள் குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது.


அதில், ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக திட்டமிட வேண்டும். வரிசையில் நிற்கும்போது மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப் பிடிக்க அறிவுறுத்தவேண்டும். பள்ளிக்கு வருகைதரும் பெற்றோர், மாணவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந் திருக்கவேண்டும். சான்றிதழ்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்களும் முகக் கவசம் மற்றும் கையுறைகள் அணிந்திருப்பது அவசியம் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டு இருக் கிறது.


 


மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டுக்கு ஏற்புடையது அல்ல


மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்


சென்னை, அக்.23 புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதை நடைமுறைப் படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து அதில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கொள்ள உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி துறை சார்பில் தனித்தனியாக குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.


அதன்படி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு குழுவும், பள்ளிகல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.


இந்தநிலையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில்,


‘மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டுக்கு ஏற்புடையது அல்ல. பட்டப் படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் நடத்துவது சாத்தியம் அல்ல. கல்லூரிகள் பல்கலைக் கழகத்துடன் இணைப்பில் இருப்பது அவசியம் ஆகும்.


கல் லூரிகள் தாங்களாகவே பட்டங்களை வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில அரசுக்கு கல்வியில் அதிக சுயாட்சி வழங்க வேண்டும்’ போன்ற கருத்துகள் இடம் பெற்றுள்ளது.


 


விமானங்களில்  கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 3 பெண் விமானிகள்


கொச்சி, அக்.23 டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.


கொச்சியில் தெற்கு கடற்படை கட்டளை (எஸ்.என்.சி) மூலம் டோர்னியர் விமானத்தின் விமானிகளாக அமர்த்த பட்டு உள்ளனர்.


கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் சிவாங்கி, சுபாங்கி சுவரூ மற்றும் திவ்யா சர்மா ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவிற்கு டோர்னியர் விமானங்களை இயக்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.


சிவாங்கி பீகாரை சேர்ந்தவர், சுபாங்கி சுவரூப் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் திவ்யா சர்மா டில்லியை சேர்ந்தவர் ஆவார்கள்.


அய்.என்.எஸ் கருடாவில் நேற்று (22.10.2020) நடை பெற்ற விழாவில் 6 பேருக்கு பட்டம் வ்ழங்கப்பட்டது இதில் இந்த  3 பெண் விமானிகளும் அடங்குவர்.


9 மாத பயிற்சிகளுக்குப் பிறகு டோர்னியர் விமானத்தில், அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இவர்கள் விரைவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment