அலறுகிறதா ஆரியம்?
தமிழக அரசியலில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடக் கருத்தியலின் வீரியம், நின்று நிலைத்து. ஆரியத்திற்கெதிராகக் களமாடி வரு கிறது. எப்பொழுதெல்லாம் தமிழகத்திற்கு அந் நிய சக்திகளால் ஆபத்து நேர்கிறதோ அப்பொழு தெல்லாம் திராவிடக் கருத்தியலும், பெரியாரும் தான் தமிழகத்தின் காவல் அரணாக நின்று பாது காத்து, நமக்கான உரிமைகளையும், மான உணர்ச் சியையும் மீட்டெடுத்துள்ளனர். தற்பொழுது தந்தை பெரியார் உயிருடன் இல்லையென்றாலும், அவர் விட்டுச்சென்ற கொள்கைகளும், கோட் பாடுகளும், திராவிட இயக்கங்களும் இன்றும் ஆரியத்தை அலற வைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
தற்பொழுது ஆரிய சக்திகளின் முழுவடிவ மாக மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க அரசு ‘விஸ்வரூப தரிசனம்' தந்தாலும் கூட, தமிழகம் இதைக்கண்டு சிறிதும் மிரளவில்லை. அவர்கள், நமது விபீஷணர்களைக் கொண்டு இங்கே பொம்மலாட்ட வித்தைகளைக் காட்டினாலும் தமிழக மக்கள் அவர்களைக்கேலிப் பொருட்க ளாகவும், நகைச்சுவைக் கதாபாத்திரங்களாகவும் மட்டுமே பார்க்கக் கூடிய சூழ்நிலை இங்கே நிலவிக் கொண்டிருக்கிறது. காவிச்சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய திராவிடச் சித்தாந்தமே அவர்களை உறங்க விடாமல் செய்கிறது. இதன் விளைவு, புத்தர், அம்பேத்கர், காந்தியார் போன்றவர்களின் கொள்கைகளில் ஊடுருவி, அவர்களின் மூல பிம்பத்தைத் தகர்த்த கூட்டம், தற்பொழுது திராவிடத்தில் ஊடுருவுவதற்கான முதற்கட்ட முயற்சிகளை வெகு வேகமாகச் செயல்படுத்த முனைந்துள்ளது என்பதைத் தற்பொழுது தமிழகத்தில் அவர்கள் செய்கின்ற சில செயல்கள் மூலமாக வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.
தந்தை பெரியாரின் தத்துவங்களையும், அவர் விட்டுச் சென்ற பணிகளையும், அவருக் குப்பின் இன்றுவரை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டும், இந்திய அரசியலில், சமூக நீதி என்ற சொல்லின் முகவரியாகவும் இருக்கக்கூடிய திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கு டன் ஒரு மொட்டைக் கடித்தை ஒரு ஆரியக்கை யூட்டுப் பெறும் பத்திரிக்கை வெளியிட்டு தனது ஆரிய முதலாளிகளின் திட்டத்தின் ஒரு பகு தியை செயல்படுத்தியுள்ளது. அடுத்ததாக, மத்தி யில் ஆளும் பா.ஜ.க தனது புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத் தைச் சார்ந்த எந்த ஆரியருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், தமிழக பா.ஜ.க.வில் இதுவரை முக்கியப் பதவி களில் இருந்த ஆரியக் கூட்டம் தமிழர்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்திருக்கிறது. மேலும் பா.ஜ.கவின் தமிழகத் தலைவராக நிய மிக்கப்பட்டுள்ள எல்.முருகன், பெரியார் தத்து வங்களை தான் ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக திராவிடம் எந்த சித்தாந்தத்தை எதிர்த்துக் கள மாடியதோ, அதே சித்தாந்தத்தை அடிப்படை யாகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர் வெளிப்படையாக பெரியாரை ஆதரிப்பது என்பது, தோளில் கைபோட்டு கழுத்தை அறுக் கும் வேலை தான் என்பது தெளிவாகிறது..
இவர்களின் பெரியார் ஆதரவு நிலைப்பாடு என்பது தி.மு.கவிற்கு சாதகமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, பேராசிரியர் சுப.வீரபாண் டியன் அவர்களை இயக்குநராகக் கொண்ட திரா விடப்பள்ளியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த நிகழ்வை ஒரு பத்தி ரிக்கை கேலிச் சித்திரமாக தனது அட்டைப் படத்தில் போட்டுத் தனது ஆரியப்புத்தியைக் காட்டியுள்ளது.
தனது தாய்மொழியான சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை வெளியிட வக்கில்லாத ஒரு ஆரி யப் பத்திரிக்கை அது. இவையெல்லாம் கிட்டத் தட்ட ஒரே காலத்தில் இடைவெளியில்லாமல் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் செயல்களை யெல்லாம் ஒற்றைப்புள்ளியில் இணைத்துப் பார்க்கும் பொழுது தேர்தல் நெருங்கும் இவ் வேளையில், ஆரியத்தின் அலறல் சத்தம் அதி கரிக்கத் தொடங்கியுள்ளது என்பது தெளிவா கிறது. ஆரியத்தின் அலறலுக்கு, திராவிடம் செவி சாய்த்து விடுமா என்ன?
- ஆசிரியர்
நன்றி: ‘செம்மொழி திராவிடன்', அக்டோபர் 2020
No comments:
Post a Comment