ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 


டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • சீனா, அமெரிக்கா போல் இந்தியா வளர்ச்சி பெறும் என்று சொல்லி வந்த நாம் இன்று வங்கதேசத்தோடு போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஊடக வெளிச்சத்தால் சரி செய்ய முடியாது. ஆனாலும், அச்சேதின், நல்ல காலம் பொறக்கும் என்ற கோஷம் மட்டும் தொடரும் என மூத்த எழுத்தாளர் ஆகார் படேல் கூறியுள்ளார்.

  • மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை உயர் கல்வியில் ஆராய்ச்சி படிப்புக்கு ஊக்கத்தையும், நாட்டின் கல்வி வளம் வெளி நாட்டிற்கு செல்வதை தடுக்கவும் செய்யும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை துவங்குவதற்கு முன்பாகவே, அவர் அளித்த வாக்கு மூலத்தை வைத்து, அவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்க நீங்கள் யார் என ஜீ நியூஸ் தொலைக்காட்சியாளர்களைப் பார்த்து டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.


தி இந்து:



  • மோடி அரசு பொருளாதாரத்தை அழித்து, மக்கள் அதிகமாக தொற்று நோய்க்கு உள்ளாக்கியுள்ளது. ஆசிய நாடுகளில் கடைசி நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

  • மோடி அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்தை இந்திய விவசாயிகளில் பாதிக்கும் மேல் எதிர்க்கின்றனர். அரசின் நிர்ண யிக்கும் குறைந்த பட்ச விலையைப் பாதிக்கும் என 40 சதவீத விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • மருத்துவப் படிப்பில் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்திட தமிழ் நாடு அரசின் நிறைவேற்றிய சட்டத்திற்கு ஆளு நர் ஒப்புதல் வழங்க வேண்டியது உடனடிக் கடமை. இல்லையேல்,  ஆட்டுக்குத் தாடி போல, மாநிலத்திற்கு ஆளுநர் பதவி என்ற அண்ணாவின் கூற்றை மறுக்க முடியாமல் போகும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • மத்திய பிரதேசத்தில் சிறைக் காவலில் இருந்த பெண்ணை ஆறு காவலர்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய பிரதேச தலைமை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., சிறை டி.ஜி.பி. உள்ளிட்டோர்க்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.


தி டெலிகிராப்:



  • தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தலைமைப் பதவியான மத்திய தகவல் ஆணையர் உள்ளிட்ட ஆறு பதவிகளை உடன் நிரப்பிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதவிகளையும் நிரப்பி விட்டதாக மத்திய அரசு பொய்யான தகவலை டிசம்பர் 2019இல் உச்ச நீதிமன்றத்தில் தந்துள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


- குடந்தை கருணா


20.10.2020


 


No comments:

Post a Comment