உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
இஸ்தான்புல்,அக்.31 துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment