டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- அண்மை நாடான வங்க தேசம் இந்தியாவை விட ஜி.டி.பி யில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பொருளாதார வல்லுனர் பத்ரலேகா சட்டர்ஜீ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவில் பட்டினியால் வாழும் மக்கள் குறியீடு அண்டை நாடுகளைவிட அதிகமாக இருப்பதை சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உலக அளவில் இந்தியா முன்னேறி வருகிறது என்ற கூற்றுக்கு மாறாக இந்த விவரங் கள் உள்ளது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- மருத்துவ முதுநிலைப்படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
- 17-ஆம் நூற்றாண்டு முதலான தென்னிந்திய குறிப்பாக திராவிட மக்களின் வரலாறு பற்றிய ’நவீன தென்னிந்தியா’ என்ற நூலை ராஜ்மோகன் காந்தி எழுதி வெளியிட்டுள்ளார்.
- ஆளுநர், சிபிஅய், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியோரை பாஜக அல்லாத அரசுகளை கவிழ்த்திட பாஜக பயன் படுத்துகிறது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- நாட்டின் ஜன நாயகம் மிகவும் கடினமான காலங்களை கடந்து வருவதால் மக்களின் துன்பங்களை சரி செய்ய வேண்டும். காங்கிரசார் மக்கள் பிரச்சினைக்காகப் போராடுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசு நிறைவேற்றிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு இன்னமும் ஒப்புதல் தராத மாநில ஆளுநரைக் கண்டித்து சி.பி.எம். கட்சியின் சார்பில் அக்டோபர் 20ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பாகவும், மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராம கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
- இந்திய விவசாயிகள் கரோனா காலத்திலும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஆனால் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்.
- நகரமயமாக்கலும் அதன் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் நகரத்தை நோக்கி வரும் நிலை - கரோனா தடுப்பை கையாள்வதில் அரசு தோல்வியடந்தது என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ணன் காந்தி கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
- ஜூன் மாதத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அக்சய் படேல், அக்கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் விலகுவதற்கு ரூ.52 கோடி விலை பேசப்பட்டதை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எட்டு எம்.எல்.ஏ.க்களில் அய்ந்து பேருக்கு பாஜக சார்பில் இடைத்தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இதே போன்ற நடைமுறையை பாஜக, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, கருநாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஜன நாயகப் படுகொலையைச் செய்தார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி கருத்து தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
19.10.2020
No comments:
Post a Comment