மதவாதத்தை தூண்டிய செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

மதவாதத்தை தூண்டிய செய்தி

தொலைக்காட்சி தலைமை நிர்வாகிமீது மும்பை காவல் துறையினர் நடவடிக்கை!


டில்லி, அக். 20- ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மதவாத மோதலைத் துண்டுவது மற்றும் போலிச் செய் திகளை ஒளிபரப்பி, தங்களுடைய தொலைக்காட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்கும் (டி.ஆர்.பி) விதமாக முறைகேடாக, தொலைக்காட்சி ஒளிபரப்பு விதிகளுக்கு முற்றிலும் புறம்பாக நடந்துகொண்ட ரிபப் ளிக் டிவி ஆர்னாப் கோஷ்வாமிக்கு எதிராக மோசடி வழக்குப் பதிவு செய்ய மும்பை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள் ளது.


 டி.ஆர்.பி. என்னும் ஊடக மதிப்பீடு மிகவும் முக்கியமான ஒன்றாகும், இந்த டி ஆர் பி யை பார்த்துதான் செய்திகளின் நம்ப கத்தன்மை போன்றவற்றை மக்கள் முடிவு செய்வார்கள். இந்த டி.ஆர்.பி. முறையில் மிகப்பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதை மராட்டிய மாநில காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில் இந்த முறை கேட்டில் ஈடுபட்ட பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான, பாஜகவின் செய்தித் தொடர்பாளர்போல் நடந்து மதவாத மோதல்களைத் தூண்டக்கூடிய விதத்தில் செய்தி களை தொடர்ந்து ஒளிபரப்பி வந்த ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாகி அர்னாப் கோஷ் வாமிக்கு மும்பை காவல்துறை விசாரணைக்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்தது, ஆனால் அவர் நேரில் வராமல் அவரது வழக்குரைஞர் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.


  இதனை அடுத்து நீதிமன்றத்தில் மும்பை காவல் துறையினர் அர் னாப் மீதான குற்றங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனை விசாரணை செய்த நீதி பதிகள் அர்னாப்பை நேரில் அழைத்து விசாணை நடத்த காவல் துறைக்கு அனுமதி அளித்தனர். மேலும் விசாரணையின் முடிவுகளை நவம் பர் 4ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட உறை ஒன்றில் முன்வைக்க நீதிமன்றம் மும்பை காவல்துறைக்கு அறிவுறுத்தியது. இந்த வழக்கு அடுத்த நவம்பர் 5 ஆம் தேதி விசா ரணைக்கு வரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இது இறுதி விசார ணையாக இருக்கும் என்றும் கூறி னர்.


 ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில்  ஆராய்ச்சி குழு மூலம் புகார் அளித்தபோது, ​​சில தொலைக்காட்சி ஊடகங்கள் டி.ஆர்.பி.யை அதிகரிக்க தனியார் நிறுவனங்களை நியமித்து ஊழல் செய்வதாக  குற்றம் சாட்டியது அந்த தனியார் நிறுவனங்கள், வீடு கள் அல்லது அடுக்குமாடி குடியி ருப்புகளில் சென்று பணம் கொடுத்து குறிப்பிட்ட தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கவேண்டும் என்றும், அதற்கான தொலைக் காட்சி மற்றும் செட் ஆப் பாக்ஸ் கள் கொடுத்து அதற்கான பணமும் அவர்களுக்கு தந்துவிடுவார்கள். இப்படிச் செய்வது ஊடக விதி முறைகளின் படி குற்றம் ஆகும். . முதற்கட்ட விசாரணையில் ரிபப் ளிக் டிவி, பாக்ஸ் சினிமா மற்றும் மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உறவினர் நடத்தும்  மராத்தி சேனல் பக் மராத்தி  ஆகியவை மொசடியில் ஈடுபட்டதாக  குற்றம் சாட்டப் பட்டன.


அக்டோபர் 14ஆம் தேதி, குடியரசு தொலைக்காட்சியின் நிர் வாக ஆசிரியர் நிரஞ்சன் நாராய ணசாமி மற்றும் மூத்த நிர்வாக ஆசிரியர் அபிஷேக் கபூர் ஆகி யோர் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு விசாரணைக்கு ஆஜ ரானார்கள்


அக்டோபர் 12ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினய் திரிபாதி என்ற முன்னாள் ஒளிபரப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள்  ஊழியரை கைது செய் ததாக  மும்பை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும், மதிப்பீடுகளை கையாள மற்றொரு குற்றவாளிக்கு பணம் கொடுத்த தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பாக்ஸ் சினிமா மற்றும் மராத்தி சேனலின் உரிமையாளர்களான பக் மராத்தி, ஷிரிஷ் ஷெட்டி மற் றும் நாராயண் சர்மா ஆகியோ ரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மராட்டிய மாநில பல்கர் என்ற பகுதியில் மேமாதம் பிள்ளைப் பிடிப்பவர்கள் என்று நினைத்து இரண்டு சாமியார்களை அப்பகுதி யில் உள்ள மக்கள் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பான செய்தியை ஒளிபரப் பிய ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியாக உள்ள அர்னாப் கோஸ்வாமி மராட்டிய அரசு சாதுக்களை கொலை செய்ய மக்களை தூண்டி விடுகிறது என் றும், இக்கொலை தொடர்பான பல்வேறு போலியான காணொ லிகளையும் தொடர்ந்து ஒளிபரப் பினார்.


 இதன் காரணமாக ரய்காட் மற்றும் கோலாப்பூர் பகுதியில் மதக்கலவரம் ஏற்பட இருந்த நிலையில் காவல்துறையின் சிறப் பான நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப் பட்டது, சாதுக் கள் கொலையில் பிற மதத்தவர்கள் தொடர்பு இல்லாத போதிலும் ரிபப்ளிக் தொலைக்காட்சி சில மாற்று மதத்தலைவர்களின் பெயரை போலியாக பயன்படுத்தி யதால் மதகலவரம் ஏற்பட இருந் தது. இது தொடர்பாக அர்னா பிற்கு ஏற்கெனவே மும்பை காவல் துறை விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியது. ஆனால் இது காங்கிரஸ் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி சோனியாகாந்தியை தனிப்பட்ட முறையில் விவாத நிகழ்ச்சியில் கொச்சையாக விமர்சனம் செய் தார். இது தொடர்பாகவும் இவர் மீது காங்கிரஸ் தலைவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த நிலையில் இவர் ஒளிபரப்பு முறை கேடு செய்துள்ளது குறித்து மும்பை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.


No comments:

Post a Comment