கேள்வி: சமுகநீதிக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி ஓரளவு வெற்றி பெற்றாலும், இது ஓய்ந்ததாகவே இல்லை. இன்னும் நாம் எவ்வளவு காலம் இதனை முன்வைத்துப் போராடுவது? இது எப்போது நமக்கு நிலைப்படும்?
பதில்: நன்றி பொறியாளர் திவாகரன் அவர்களே!
ஜாதி பல ஆயிரம் ஆண்டுகள் கொடுமை; அதனை ஒரே நூற்றாண்டில் கலகலக்க வைத்தாலும் கூட - சமூக நீதிப் பிரச்சினையில் ஆதிக்க வாதிகள் (பார்ப்பனர்கள்) சுகத்தை எளிதில் விட்டுக் கொடுப்பார்களா? அவர்களிடம் கட்டுப்பாடு உண்டு. நம்மவர்களிடம் புரிதலும் இல்லை; கட்டுப்பாடும் இல்லை - சூது சூழ்ச்சித் தந்திரங்களை எதிர்த்து தொடர்ந்து போராடித்தான் வெற்றி பெற வேண்டும் - நம்பிக்கையை இழக்கக்கூடாது.
கேள்வி: உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர்கள் ஒரே நிலைப்பாடுடன் இருக்கின்றார்கள், இதே நிலைப்பாடு எப்போது பார்ப்பனர் அல்லாதாருக்கு வரும்?
பதில்: பார்ப்பனர் வெகு சிறுபான்மையர். அதனால் அவர்களிடம் "ஒருமைப்பாடு-ஒற்றுமை" (பிளிவிளிநிணிழிணிமிஜிசீ) உண்டு.
பார்ப்பனரல்லாதார் 97 பேரும், '970 பேர்களாக' உள்ளதால் "வேற்றுமையினும் வேற்றுமை" (பிணிஜிணிஸிளிநிணிழிணிமிஜிசீ) உள்ளவர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஒன்று சேருவது எளிதானது அல்ல. நிக்ஷீணீபீமீபீ வீஸீ-மீஹீuணீறீவீtஹ் என்ற படிக்கட்டு ஜாதி முறையே இந்த ஆபத்துக்கு மூல காரணம் வெறும் பேதம் என்றால் மற்றவர் எளிதில் ஒன்று சேர்ந்திருப்பர். இது பல படிகளில் உள்ளதால் எளிதில் ஒன்றுபட்டு நிற்க முடியாத நிலை உணர்ந்து - உணரவைக்கப்பட்டு தெளிவடைந்தால் வெற்றி நிச்சயம்!
No comments:
Post a Comment