டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- தமிழ் நாடு அரசு பிறப்பித்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த கல்வி ஆண்டில் தமிழ் நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்டு உள்ளது என்ற கருத்தினை பெற்று, ஆளு நர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மத்திய அரசு நடத்தும் சைனிக் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட பாதுகாப்புத்துறை அமைச் சகம் ஆணை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- கிழக்கு இந்தியாவில் பாஜக தனது காலடியை விரிவாக்கும் கனவு, பீகார் தேர்தலில் முடிவுக்கு வரும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் கூறியுள்ளார்.
- மகாராட்டிராவில் மராத்தா சமூகத்தினர்க்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி பெறும் என அமைச்சர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
- மத்திய தகவல் ஆணையத்தின் முதன்மை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை மோடி அரசுக்கு துதிபாடுவோரை நியமிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியுள்ளார்.
- கேரளா துவக்க நாளில் மாநில மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட நாராயண குருவின் பாடல்களைக் கொண்ட இசை நிகழ்ச்சியை நடத்தப் போவதாக மெக்சாசே விருது பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தி இந்து:
- மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5. சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஆண்டு 303 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
- குடந்தை கருணா
31.10.2020
No comments:
Post a Comment