சென்னை, அக். 18- இதுவரை வெளிச்சத்திற்கு வராத, சிறந்த குறிக்கோளுடன் கூடிய தொழில்முனைவு புத்தாக்கங் களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் தனது முயற்சி களை தளராது மேற்கொள் ளும் கவின்கேர் மற்றும் எம்எம்ஏ, இம்முறை சின்னிகிருஷ்ணன் விருதுகளின் 9ஆவது பதிப்பை ஒரு தனித் துவமான, நேரடி தொடர்பில் லாத வழிமுறையில் ஒருங்கி ணைந்து நடத்தியது.
கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் ன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனரு மான சஞ்சய் கிர்லோஸ்கர், இந்நிகழ்வில் தலைமை விருந் தினராக பங்கேற்று, வெற்றி யாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்வு பற்றி தனது கருத்தைப் பகிர்ந்துகொண்ட கவின்கேர் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரங்கநாதன் கூறு கையில், இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்பத் தின் வளர்ச்சி மற்றும் பயன் பாட்டின் மூலம் தொழில் துறைக்கு, சமூகத்திற்க்கு மற் றும் பொதுமக்களுக்கும் மிகச் சிறந்த மதிப்பினை சேர்த்து வழங்குகின்ற, இதுவரை அதி கமாக பிரபலமாகாத சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிந்து, வெளிப்படுத்துவ தற்கான எமது பயணத்தை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம் எனக் கூறினார்.
No comments:
Post a Comment