தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக் கட்சியினர் மனு அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக் கட்சியினர் மனு அளிப்பு


தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை எதிர்த்தும், அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழைமைக் கட்சிகள் சார்பில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் தலைமையில், மாவட்ட தலைவர் வீ.மோகன், மதிமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆரூர் சீனிவாசன், விசிக மாவட்ட செயலாளர் மா.வடிவழகன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜீ.சுந்தரமூர்த்தி, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி, மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட து.தலைவர் கி.அருண்காந்தி, மாவட்ட து.செயலாளர் க.வீரையன், மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, ப.க மாவட்ட தலைவர் இரா.சிவக்குமார் ஆகியோருடன் தமிழர் தலைவரின் கண்டன அறிக்கையோடு இணைத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment