சென்னை, அக். 24- தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர்--சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06866) வரும் 26ஆம் தேதி முதல் தினமும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும். மறுமார்க் கமாக எழும்பூர்--தஞ்சாவூர் இடையே சிறப்பு ரயில் (06865) வரும் 27ஆம் தேதி முதல் தினமும் எழும்பூர் ரயில் நிலை யத்தில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6 மணிக்கு சென்றடையும்.
எழும்பூர்--கொல்லம் இடையே சிறப்பு ரயில் (06101) வரும் 25ஆம் தேதி முதல் தினமும் மாலை 5 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொல்லத்திற்கு காலை 8.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்--எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06102) வரும் 26ஆம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்னை- எழும்பூர் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 3.05 மணிக்கு வந்தடையும்.
மேலும் எழும்பூர்--திருச்சி இடையே சிறப்பு ரயில் (02653) வரும் 27ஆம் தேதி முதல் தினமும் எழும்பூர் ரயில் நிலை யத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். மறுமார்க்க மாக திருச்சி-எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (02654) வரும் 26ஆம் தேதி முதல் இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.
No comments:
Post a Comment