நீட் தேர்வு முடிவுகள் விவகாரத்தில் மோதும் நீதிமன்றமும் கல்வித்துறை அமைச்சரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

நீட் தேர்வு முடிவுகள் விவகாரத்தில் மோதும் நீதிமன்றமும் கல்வித்துறை அமைச்சரும்


புதுடில்லி, அக். 14- நீட் தேர்வை எழுத முடியாமல்  தவறவிட்ட மாணவர்க ளுக்கு, அக்டோபர் .14ஆம் தேதி மீண் டும் தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு உத் தரவிட்டு உள்ளது.


கரோனா பொதுமுடக்கம் காரண மாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு  கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி திட்ட மிட்டபடி நடைபெற்றது. தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக சரியான போக்குவரத்து இல்லாததால், ஏராள மான மாணவ மாணவிகள் தேர்வை எழுத முடியாமல் அவதிப்பட்டனர்.  தேர்வுக்கு நாடு முழுவதும்   15.97 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 85-90 சதவீதம் பேர் மட்டுமே தேர்வுகள் எழுதினார்.  பல மாணவர்களின் பெற் றோர்கள் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக மறு தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கும் கோரிக்கை விடுத்தனர்.


அதைத்தொடர்ந்து,  நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர் களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில்  பொது நல மனு தாக் கல் செய்யப்பட்டது. மனுவில், மறு தேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமைக்கு உத் தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


அந்த மனு 12.10.2020 அன்று விசார ணைக்கு வந்தது. வழக்கின் விசாரணை யைத் தொடர்ந்து, கரோனாவால் பாதிக் கப் பட்டு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கும், போக்குவரத்து மற்றும் பல்வேறு இடையூறுகள் காரண மாக,  தேர்வை எதிர்கொள்ள முடியாத வர்க ளுக்கு வரும்  14ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை அக்டோபர் 16ஆம் தேதி வெளியிட வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.


 இந்த நிலையில் இன்று ஒரு நாள் அவகாசம் கொடுத்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வைப்பது மிகவும் சிரமமான செயல் ஆகும். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்க கல்வித்துறை அமைச்சர், 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறி யுள்ளார்.  இதனால் செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்வு எழுதாத ஆயிரக் கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவு என்ன வாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


No comments:

Post a Comment