பார்ப்பான் சாகாமல் இருந்தால் சரி...
கேள்வி: 'நீட்' தேர்வுக்கு எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?
பதில்: தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வை எதிர்க்கமாட்டார்கள். ஆனால், தமிழகக் கட்சிகள் 'நீட்' தேர்வை எதிர்க்கும். இது தமிழகத்தின் தனித் தன்மை. ('துக்ளக்', 14.10.2020, பக்கம் 13).
'நீட்' எனும் ஆரிய நஞ்சால் மாணவர்கள் எதிர்க்காமல்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சூத்திரர்களும், பஞ்சமர்களும் செத் தால், பார்ப்பனர்களுக்கு ஒரு பொருட்டா? கட்சிகள் எதிர்க்கின்றன, ஆமாம்! அவர்கள் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்களே!
யார் அப்பன் வீட்டுப்பணம்?
ஜி.எஸ்.டி. தொகையில் ரூ.20 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். - நிர்மலா சீதா ராமன், மத்திய நிதியமைச்சர்
மீதி 80 ஆயிரம் கோடி ரூபாய் யார் அப்பன் வீட்டுப் பணமோ? மாநிலங்களுக்குரிய பணத்தை வைத் துத்தான் மத்திய அரசு நடக்க வேண் டுமா? நல்ல தமாஷ்!
ஒரு பிளஸ் - ஒரு மைனசா?
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. கூட்டணியுடன் இணைகிறது.
ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. கூட்டணியி லிருந்து விலகுகிறது என்பதையும் சேர்த்து யோசிக்கலாமே!
‘பிரதி லோமா'
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கோவில் அர்ச்சகர் மகளைக் காதல் திருமணம் செய்துகொண்டார். மணமகளின் தந்தை தீக்குளிக்க முயற்சி.
'பிராமணாள்' வீட்டுப் பெண்ணை சூத்திர ஜாதி ஆண் கல்யாணம் கட்டிக்கிட்டா 'பிரதிலோமா'வாம் (அதாவது சண்டாளர்கள்). மனுதர்மம் சொல்லுகிறது - ஆனால், 'பிராம ணாள்' ஆண் சூத்திரப் பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டா அதற்குப் பெயர் அனுலோமாவாம். முன்னதை ஏற்காத 'துக்ளக்' கூட்டம் பின்னதை மட்டும் ஏற்றுக்கொள்ளும். எல்லாம் ஒரு குலத்துக்கொரு நீதிதானே.
இதெல்லாம்
ஒரு பிரச்சினையா?
மத்திய பிரதேசத்தில் 19 வயது தாழ்த் தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை.
உ.பி. முதலமைச்சரைக் கேட்டுப் பாருங்கள், இவையெல்லாம் சிறு பிழைகள்தாம்!
எல்லாம் ‘ஒதுக்'குதல்தான்!
ஒரே நாளில் கங்கையில் 4,900 பேரின் அஸ்தி கரைப்பு.
கங்கையைச் சுத்திகரிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய பி.ஜே.பி. அரசு 'ஒதுக்'கீடு!
No comments:
Post a Comment