வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 17, 2020

வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை

சென்னை, அக். 17- - புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தமிழகத்திலிருந்து இயக்கப் பட்ட ரயில்களுக்கான செல வுத் தொகையில் மத்திய அரசு எந்தப் பங்கையும் செலுத்த வில்லை என்று தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தெற்கு ரயில்வே பதிலளித்து உள்ளது.


கரோனா தொற்றுப் பர வல் காரணமாக நடைமுறைப் படுத்தப்பட்ட பொது முடக் கக் காலத்தில், தமிழகத்தில் இருந்த ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல 265 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டன. அதற்கான மொத்த செலவு ரூ.34.6 கோடியாகும். இதில் சுமார் 3.54 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று சேர்ந்தனர்.இந்த நிலையில், சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தெற்கு ரயில்வேக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப் பிய கேள்விக்கு, தெற்கு ரயில்வே இயக்கிய சிறப்பு ரயில்களுக் கான கட்டணச் செலவில் மத் திய அரசின் பங்களிப்பு எது வும் இல்லை என்று பதில ளிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, முன் பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள் மூலம், முற்றிலும் படுக்கை வசதி கொண்ட சிறப்பு ரயில் கள் இயக்கப்பட்டன.தமிழ கத்தில் இருந்துதான் அதிக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. தெற்கு ரயில்வே இயக்கிய ஒட்டுமொத்த சிறப்பு ரயில் களின் எண்ணிக்கை 507 ஆக இருக்கும் நிலையில், தமிழகத் தில் இருந்து மட்டும் 50 விழுக் காடு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.


No comments:

Post a Comment