யார் மிலேச்சர்கள்?
இந்துப் புராணமான வாயு புராணம், மச்ச புராணம், உப நிடதங்களில் சரஸ்வதி நதிக் கரைக்கு கீழான பகுதி (தக் காணம்) சப்த நதிகளுக்கு மேற்கே உள்ள பகுதி, குஜ் ஜரம் (இன்றைய குஜராத், ராஜஸ்தான், அரியானா போன்றவைகள்), மகரதேசம் (இன்றைய மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தின் தென் மேற்கு பகுதிகள்), பகிரத பிரதேசம் (இன்றைய பிகார், மேற்கு வங்கம், மற்றும் பங்க ளாதேஷ்) போன்றவைகள் மிலேச்சர்கள் வாழும் பகுதி யாகும். மேலும் இந்து சமய நூல்களில் மிலேச்சர்களை வருணாசிரம தருமத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என கூறுகிறது.
வியாசரின் மகாபாரதத் தில் மிலேச்ச மக்கள், மிலேச்ச நாடுகள், மன்னர்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மிலேச்ச போர் வீரர்கள், தூய் மையற்ற பழக்கவழக்கங் களையும், தலையை முழு வதுமாக அல்லது பாதி அள விற்கு மழித்துக் கொண்டு, முகத்தை மூடும் அளவிற்கு தலைக்கவசம் அணிந்து, கோரமான முகத்தையும், மூக்கையும் கொண்டவர்கள் என மகாபாரதம் குறிப் பிடுகிறது. (தலைக்கவசம் அணிந்தவர்கள் தக்காணம் மற்றும் தென் இந்திய பகு தியை ஆண்ட பாண்டிய, சேர, சோழ மன்னர்கள், மலைகளில், மலைக் குகை களில் வாழ்பவர்கள்.)
வசிட்டரின் நந்தினி எனும் தெய்வீகப் பசுவைக் கவர வந்த விசுவாமித்திரரின் போர்ப்படைகளை எதிர் கொள்ள, வசிட்டரின் ஆணைப்படி, நந்தினி தனது கோரமான கண்களிலிருந்து வெளியிட்ட பல இனப் போர் வீரர்களில் மிலேச்சர்களும் ஒருவகையினர் ஆவர். (பல் லவர்களின் கொடியில் காளைகள் சின்னம் இருந்தது) ஆகவே பல்லவர்களும் பார்ப்பனர்களுக்கு மிலேச்சர் கள்தான்.
மிலேச்ச அரசர்களில் புகழ்பெற்றவர்களில் பிராக் ஜோதிச நாட்டின் மன்னர் (இன்றைய அஸ்ஸாம்) பக தத்தனும் ஒருவராவார்.
குருசேத்திரப் போரில் மிலேச்சப் படைகள் பாண் டவர் அணிக்கு எதிராகப் பெரும் யானைப்படைகளு டன் போரிட்டன. இந்தியா வின் கிழக்கில் இருந்த பாலப் பேரரசு மிலேச்சர்களின் நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. பாலப்பிரதேசம் என்பது வடகிழக்கு பகுதிகளைக் குறிக்கும்.
பார்ப்பனர்கள் அல்லாத அனைவரையுமே மிலேச் சர்கள் என்று கூறினார்கள். மிலேச்சர்கள் என்றால் பண் படாத மக்கள் என்று பொருள். வேத தர்மங்களைப் பின் பற்றாத மக்களைக் குறிக்கவும் மிலேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மத்திய கால இந்தியாவில், வெளி நாட்டவர்களை மிலேச்சர்கள் எனக் குறிப்பிட்டனர் என இந்தியாவில் பயணித்த பார சீக அறிஞர் அல்-பிருனி தனது பயணக் குறிப்புகளில் குறித்துள்ளார்.
- மயிலாடன்
No comments:
Post a Comment