இன்னும் பில்லி சூனியம் என்னும் ஏமாற்று வேலையை நம்பி செல்வத்தை இழக்கும் மூடர்கள் ஏமாற்றிய சாமியார் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 25, 2020

இன்னும் பில்லி சூனியம் என்னும் ஏமாற்று வேலையை நம்பி செல்வத்தை இழக்கும் மூடர்கள் ஏமாற்றிய சாமியார் கைது

சென்னை அக். 25- சென்னையில் பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த கும்பல் சுற்றி வளைக்கப் பட்டு கைது செய்யப் பட்டுள் ளது. மோசடியில் ஈடுபட்ட சாமியாரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.



தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன் (வயது 45). மினிவேன் ஓட்டுநரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் சென்று கொண்டிருந்த சாமி யார் ஒருவரை பார்த்து அவரி டம் தமது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய வேண்டுமென  கூறியுள்ளார்.


உடனடியாக அந்த சாமி யார் உனக்கு பில்லி, சூனியம் சிலர் வைத்துள்ளதாகவும், அதனை எடுக்க சென்னை வருமாறும், வரும் போது ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகள் எடுத்து வருமாறும் கூறியதாக தெரிகிறது. இதனை யடுத்து, ராஜகுமாரன் தான் சொந்தமாக வைத்து ஓட்டி வந்த மினிவேனை ரூ.5 லட்சத்திற்கு விற்று விட்டு தனது உறவினருடன் சென்னை வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரயில் நிலையத்தின் வாயிலில் நின்று இருந்த சாமியாரை ஏற்றிக்கொண்டு வண்ணை நகர்  ஸ்டான்லி மருத்துவமனை அருகே சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் ரூ.2 லட்சம் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார்.


உடனடியாக அதை பெற்று கொண்ட சாமியார் பூசைப் பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றவர் திரும்பி வரவேயில்லை. அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜகுமாரன், சம்பவம் தொடர்பாக வண்ணை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரை பெற்று ஸ்டான்லி மருத்துவ மனையின் கண் காணிப்பு கேமராக்களின் காட் சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஏமாற்றப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணை வைத்து தேடினர். விசாரணையில் போலி சாமியாராக ஏமாற்றி யது திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் உல்லாச நகரை சேர்ந்த யுவராஜ்(42) என்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவல் துறையினர் வீட்டில் இருந்த யுவராஜின் உதவியா ளர்கள் அமர்நாத் (21), சுரேஷ் (34), மனைவி ஜெயந்தி , பாப்பா (56) ஆகிய 4 பேரையும் கைது காவல் நிலையம் அழைத்து விசாரித்ததில் ஒரு குழுவாக செயல்பட்டு பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.


முக்கிய குற்றவாளியான யுவராஜ் வேளச்சேரி பகுதியில் ஒருவரை ஏமாற்ற சென்றவர் திரும்பவில்லை என தெரிவித் துள்ளனர்.4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த வண்ணை நகர் காவல் துறை யினர் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான யுவராஜை தேடி வருகின்றனர்.


மேலும் பிடிபட்ட நபர்களி டம் காவல் துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இவர்கள் ஒரு குழுவாக தமி ழகம் முழுவதும் சுற்றி வந்ததும், பிரச்சினையில் இருக்கும் யாரோ ஒருவரை தேர்வு செய்து அங்கேயே தங்கியிருந்து அவர்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, பின்னர் முக்கிய குற்றவாளியான யுவராஜ் சாமி யார் வேடத்தில் அங்கு சென்று உங்கள் வீட்டில் பிரச்சினை உள்ளது, உடல் நல குறைவு உள்ளது எனக்கூறி அவர்களது நம்பிக்கையை பெற்று பில்லி, சூனியம் இருப்பதாக கூறி, அதனை எடுக்க ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகள் தயார் செய்யுமாறு கூறிவிட்டு அவ்வாறு பணமும், கோழியும் தயார் செய்தபிறகு பணத்தை பெற்று கொண்டு தலைமறை வாகி விடுவதும் தெரியவந்தது.


தலைமறைவான யுவராஜை பிடித்த பிறகே அவர் இது போல மோசடி செய்து எவ்வ ளவு பேரை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.


No comments:

Post a Comment