ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மேனாள் ஒன்றிய பெருந்தலைவருமான அருமைத் தோழர் காந்தி அவர்கள் (வயது 59) இன்று (18.10.2020) காலை உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். துயரமும் அளவற்றது.
தி.மு. கழகத்தின் சிறந்த செயல் வீரர்களில் ஒருவராகவும், திராவிடர் கழகத் தோழர்களிடமும், நம்மிடமும் மாறாத அன்பு கொண்டவர்.
தி.மு.க.விற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்து பணிபுரிந்த முரட்டு கொள்கைப் பிடிப்பும், பழகுதற்கு மிகவும் இனிய சுபாவமும் கொண்ட பண்பாளர்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத் தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரத்த நாடு அமைப்பிற்கும், நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு கலா என்ற மனைவியும், கார்த்தி, கரிகாலன் என்ற இரு மகன்களும், கவிபாரதி என்ற மகளும் உள்ளனர்.
இரண்டு ஆண்டுக்கு முன் அவரது மகள் கவிபாரதிக்கு தி.மு.க தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில், என்னுடைய முன்னிலையில் தஞ்சை மகாராஜா மகாலில் மண விழா நடைபெற்றது.
குறிப்பு: அவரது மூத்த மகன் கா.கார்த்தி அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
18.10.2020
No comments:
Post a Comment