ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரியின் நடவடிக் கைகள் அப்பதவிக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக உள்ளதால், அவரை திரும்ப அழைத்துக்கொள்ளும்படி சிவசேனா மத்திய அரசைக் கேட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை அப்பதவியில் இருந்து நீக்கக் கோரி, தமிழ் நாடு முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • அரசின் சட்டங்கள் பாமர மக்களுக்குப் புரியும் வண்ணம் மாநில மொழிகளிலும், எளிய ஆங்கிலத்திலும் இருத்தல் வேண்டும். இது குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அரசுக்கும், பார் கவுன்சிலுக்கும் உச்ச நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 தி இந்து:



  • மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

  • மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடுக்கு மறுப்பு தெரிவித்தது மத்திய அரசின் வஞ்சக மனப்பான்மையையே காட்டுகிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

  • பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றதில் பாஜக முன்னணியில் உள்ளது. 2018-19ல், மொத்தம் ரூ.876 கோடி அய்ந்து தேசிய கட்சிகள் இவ்வாறு நிதி பெற்றுள்ளன. அதில் பாஜக மட்டும் ரூ.698 கோடியும், காங்கிரஸ் ரூ.122.5 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


- குடந்தை கருணா


16.10.2020


No comments:

Post a Comment