மத்தூர், அக். 18- திருப்பத்தூர் மாவட்டம், மத்தூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் 3.10.2020 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில், ஒன்றிய தலை வர் கி.முருகேசன் அவர்களின் உண்ணாமலை இல்லம் நடுப் பட்டில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி ‘விடுதலை' சந்தா சேர்ப்பிற் காக மாநில கழக அமைப்பா ளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன், மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் ஆகியோர் வருகை புரிந்தனர்.
அதிகப்படியான மாண வர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்கள் ஏன் கழகத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என வும், மாணவர்கள், இளைஞர் கள் பெரியார் சமூகக் காப் பணியில் இணைந்து செயல் பட வேண்டும் - அனைவரின் இல்லங்களிலும் விடுதலை இருப்பதை உறுதி செய்வ தோடு நாள்தோறும் நாம் அனைவரும் விடுதலையை முழுமையாக வாசிக்க வேண் டும் எனவும் கழகப் பொறுப் பாளர்கள் அறிவுரை வழங் கினார்.
மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி தலைவர் இரா.பழனி, மருத்துவ மாண வர் கழக மாநில துணைச் செயலாளர் சு.நாத்திகன், மகளிர் பாசறை மாவட்ட தலைவர் மு.இந்திரா காந்தி, தருமதோட்டம் சி.முருகம் மாள், இளைஞரணி சே.ராமஜெயம், கோ.குமரேசன், மாணவர் கழக ச.மணிமொழி, இர.நிலவன், ச.அகரன், செ. அறிவுச்செல்வம், சு.தமிழின் பன் உள்ளிட்ட பொறுப்பா ளர்களும், ஒன்றிய திராவிடர் கழக செயலார் திருமாறன், துணைத் தலைவர் சா.தனஞ்செயன், பொன்.சிவக்குமார், பூங்குழலி உள்ளிட்ட தோழர் களும் கலந்து கொண்டு சிறப் பித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment