உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் பாபர் மசூதி இருந்த விவகாரம் பல ஆண்டுகளாக சர்ச்சையில் இருந்து வந்தது. இது 1992ஆம் ஆண்டு அத்துமீறி இடிக்கப்பட்ட போது மதக்கலவரம் வெடித்தது. பல ஆண்டுகளாக தீர்க்கப் படாமல் இருந்த இந்த வழக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி முடிவுக்கு வந்தது. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்புக்கு சொந்தம். மசூதி கட்டுவதற்கு மாற்று இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் மதுராவில் உள்ள 13.37 ஏக்கர் நிலம்கிருஷ்ண ஜென்மபூமி என்று உரிமை கோரியும், அந்த இடத்தில் இருக்கும் ஈத்கா மசூதியை அகற்ற வேண்டும் என்றும் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை பகவான் ஸ்ரீகிருஷ்ண விராஜ் மான் அமைப்பு கையில் எடுத்திருக்கிறது. இதன் சார்பில் வழக் கறிஞர்கள் ஹரி ஷங்கர் ஜெயின், விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய இவர்கள், சன்னி வக்ஃப் வாரியத்தின் ஒப்புதலுடன் ஈத்கா மசூதி குழு நிகழ்த்திய அத்துமீறல், மசூதியின் கட்டுமானம் மற்றும் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த 1669-70 காலக்கட்டத்தில் அவுரங்கசிப் ஆட் சிக் காலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் கத்ரா கேஷவ்தேவ் என்ற இடத்தில் அமைந்திருந்த கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தை ஈத்கா மசூதியாக மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது,
பிறகு அப்பகுதியை மராத்தியர்கள் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இதையடுத்து மசூதியை இடித்து விட்டு மீண்டும் கோவிலைக் கட்டினர்,. மசூதி முழுமையாக இடிக்கப்படாமல் வழிபாட்டுப்பகுதி மற்றும் தங்குமிடம் போன்றவை அப்படியே இருந்தது, அங்கு இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்திவந்தனர்.
ஆக்ரா மற்றும் மதுரா ஆகியவற்றை இஸ்லாமியர் மற்றும் இந்துக்களுக்குப் பொதுவான பகுதி என்று மராத்தியர்கள் பிரகடனம் செய்தனர். இவர்கள் எவ்வாறு பராமரித்து வந்தார்களோ, அதேநிலை பிரிட்டிஷாரின் ஆட்சியிலும் தொடர்ந்தது. இந்த சூழலில் 1815ஆம் ஆண்டு 13.37 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் ஏலத்திற்கு விட்டனர்.
இதனை பனாரஸ் ராஜா பட்னிமால் என்பவர் வாங் கினார். அவரே சம்பந்தப்பட்ட நிலத்திற்கு உரிமையாளர் ஆனார். இதற்கிடையில் 1921ஆம் ஆண்டு நிலத்திற்கு உரிமை கோரி இஸ்லாமியர்கள் தாக்கல் செய்த மனுவை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்டிட் மதன் மோகன் மாள்வியா, கோஸ்வாமி கணேஷ் தத் மற்றும் பிகென் லால்ஜி ஆட்ரேயிற்கு 13.37 ஏக்கர் நிலத்தை ரூ.13,400க்கு ராஜா பட்னிமால் விற்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் சம்பந்தப்பட்ட நிலத்திற்கென அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் மேற்பார்வையில் கோயில் கோவில் மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது, இந்நிலையில் 1968ஆம் ஆண்டு ஷாஹி ஈத்கா மசூதியின் சொசைட்டி ஆனது ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி சேவா சங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது ஈத்கா மசூதி புதுப்பிக்கப்பட்டு அப்படியே தொடரட்டும் போன்ற கோரிக்கைகளை சேவா சங்கம் ஏற்றுக் கொண்டது.
இதுதொடர்பாக மதுரா சிவில் நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் தற்போது இருக்கும் மசூதியில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த சூழலில் தான் 13.37 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமிக்காக முழுவதுமாக மீட்டெடுக்க வேண்டும் என்று புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போதும் அமைதியாக இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் அவர்கள் விழாக்களை ஒன்றாக இருந்து கொண்டாடி வருகின்றனர், இந்த நிலையில் மீண்டும் இந் துத்துவ அமைப்புகள் பிரச்சினையை எழுப்பி அமைதியை சீர்குலைக்க முயல்கின்றன.
No comments:
Post a Comment