ஊட்டச்சத்து குறைபாட்டில் மோசமான நிலையில் இந்தியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 17, 2020

ஊட்டச்சத்து குறைபாட்டில் மோசமான நிலையில் இந்தியா

உலகப்பட்டினிக் குறியீட்டு அறிக்கையில் எச்சரிக்கை



புதுடில்லி, அக். 17- உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக் குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப் பின்றி விரயம் செய்யப்படுவ தாக குளோபல் ஹங்கர் இண் டெக்ஸ் என்ற உலகப் பட் டினிக் குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2015-19 காலக்கட்டத்தில் இது படுமோசமடைந்துள் ளது. 2010--14 காலக்கட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத் தின்றி விரயம் செய்யப்படுவது 15.1 விழுக்காடாக இருந்தது, 2015--19இல் இது மோச மடைந்து 17.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது.


உலகப் பட்டினிக் குறி யீட்டு நாடுகள் 107இல் இந் தியா 94ஆம் இடத்தில் உள் ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75ஆம் இடத் திலும் பாகிஸ்தான் 88ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது. இந்த அறிக்கை 16.10.2020 அன்று வெளியானது.


நான்கு அளவுகோல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்ட கால ஊட்டச் சத்தின்மைக் குறியீடு இரண்டி லும் இந்தியா மோச மாக உள்ளது. சைல்ட் வேஸ்டிங் என்று அழைக்கப்படும் ஊட் டச்சத்தின்மை விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமாக இருப்பதாகவும் 20 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என் பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.


ஆனால் போதிய அளவு கலோரி இல்லாத 14 விழுக் காடு மக்கள் தொகையில் ஊட்டச்சத்தினால் இறக்கும் குழந்தைகள் விகிதம் இந்தியா வில் மிகக்குறைவாக 3.7விழுக் காடாக உள்ளது.


தெற்கு, கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பட்டினிக் குறியீட்டில் இந் தியாவை விடவும் மோசமாக உள்ள நாடுகளில் டைமூர்-லெஸ்ட், ஆப்கானிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன.


உலகம் முழுதும் 69 கோடி மக்கள் இன்னமும் ஊட்டச் சத்தின்மையினால் அவதிப் பட்டு வருவதாக இதே அறிக்கை கூறுகிறது. வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு நட வடிக்கைகளை கோவிட்-19 வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது.


“2030ஆம் ஆண்டில் பட் டினியை பூஜ்ஜியமாக்கும் நீடித்த வளர்ச்சி இலக்கை நோக்கி உலக நாடுகள் செல்லவில்லை. தற்போதைய நிலவரப்படி இப்படியே போனால் 37 நாடுகள் பசி யைக் குறைக்கும் விகிதத்திலும் பின்னடைவே காணும். இந்த அறிக்கை கோவிட்-19 தாக் கத்தை கணக்கிலெடுக்க வில்லை. கரோனா பெருந் தொற்று பட்டினிக் குறியீட் டில் வளரும், ஏழை நாடுகளை மேலும் கீழ்நிலைக்கே தள்ள வாய்ப்பு. நம் உணவு அமைப்பு முறைகள் பட்டினியை முற் றிலும் ஒழிக்க, பூஜ்ஜியமாக்க போதாதவையாக உள்ளன” என்று இந்த அறிக்கை எச் சரித்துள்ளது.


 


No comments:

Post a Comment