மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் இந்தியை திணிப்பதில் ஒரே அணியில் நிற்கின்றனர். நம் தாய்த் தமிழ்நாட்டில் எழுந்த வலிமையான எதிர்ப்பின் காரணமாக திரும்ப பெறுகின்றனர் இந்தியை ஓர் ஆதிக்க மொழியாக மட்டும் நினைத்து எதிர்க்க வில்லை, ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் நமக்கு எந்த எதிர்ப் பும் இல்லை, ஆனால் இந்தி என்பது பண்பாட்டு படையெடுப்பு, கலாச்சார திணிப்பாக உள்ளது. அதனால்தான் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ராஜாஜி அவர்கள் கட்டாயப்பாடமாக இந்தியை திணித்தபோது போராட்ட களத்தில் குதித்து, 'இந்தி ஒழிக! தமிழ் வாழ்க' என தமிழ் மக்களை முழங்க செய்தார்.
இந்த கரோனா காலகட்டத்தில் சுயமரியாதை இயக்க வரலாற்றை படிக்கும் வாய்ப்பை பெற்றேன் அதில் இந்தித் திணிப்பை எதிர்த்தற்காக பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர், பெண்கள் குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல், முத்தமிழறி ஞர் கலைஞர் உட்பட சான்றோர்கள் பலர் மாணவர்களாக, இளைஞர்களாக பங்குகொண்டனர், தந்தை பெரியார் இரண்டு ஆண்டுகள் "கடுங்காவல் தண்டனை" அனுபவித் தார்! அறிஞர் அண்ணா அவர்கள் கட்டாய இந்தியை எதிர்த்து கதீட்ரல் சாலையில் இன எழுச்சி உரையாற்றியதற்கு அவர்மீது வழக்கு போட்ட னர். அதில் 4 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. அக்டோபர் 2, 1938இல் கைது செய்யப்பட்டார். இதுவே அவருக்கு முதல் சிறை அனுபவம். அப்போது அண்ணா அவர்களின் துணைவியார் இராணி அம்மையார் ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிடுகிறார். அதில், "தங்கட்கு இன்று முதல் நான்கு மாதம் சிறை தண்டனை கட்டாய இந்தி கூடாது என்று பேசியதற்காக காங்கிரஸ் அரசு கொடுத்ததை மகிழ்வு டன் ஏற்றுச் சிறைக்குச் சென்ற தங்கள் வீரத்தைப் பாராட்டுவதுடன், தங்களை வாழ்க் கைத் துணைவராக "யான் பெற்ற செல்வம்" இன்று தான் பெற்றேன். தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேற்றை இன்றுதான் பெற்றுள்ளீர்கள். தங்கள் வீரத்தையும், தமிழ் தொண்டையும் தமிழ்நாடு என்றும் மறக்காது. தமிழ்த்தாய் தங்கள் பக்கம் நின்று காப்பாள். வீரத்துடன் சிறை சென்று வருக!" படித்தவுடன் கண்கள் கலங்கின. தன் கணவரை சிறைக்கு வீரத்தோடு வாழ்த்துச் சொல்லி அனுப்பிய சுயமரியாதை வீராங்கனை இராணிஅம்மையார் வாழ்க!
இந்த செய்தியை அக மகிழ்ந்து 'விடுதலை', 'குடிஅரசு' பத்திரி கைகளில் வெளியிட்டுள்ளார் தந்தை பெரியார்! அறிஞர் அண்ணா சிறை சென்ற இந்த நாளில் (2.10.1938)உறுதியேற்போம்! திராவிடர் இயக் கத்தின் மூத்த தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கழக ஆட்சி அமைத்து இந்தி, சமஸ்கிருத, வடவர்களின் ஆதிக்கத்தை அடக்கி தாய்த் தமிழ்நாட்டை காப்போம்! இந்தித் திணிப்பு ஒழிக! தமிழ் வாழ்க!
வழக்குரைஞர் செல்வி பா.மணியம்மை
(மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
No comments:
Post a Comment