ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 6, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • மாநிலங்களுக்கு உடனடியாக ரூ.20,000 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்படும்.2017-18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சுமார் ரூ.25,000 கோடி அடுத்த வாரம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தார்.

  • நடப்பு ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், இங்கிலாந்து விஞ்ஞானி மைக்கேல் ஹூட்டன் ஆகிய மூவருக்கும் மொத்த பரிசுத் தொகையான ரூ.8.27 கோடி பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

  • உ.பி. ஹாத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்டு பாலியல் வன்கொடு குறித்து ஆட்சியர் அலட்சியம், காவல் துறையின் குழறுபடியான விசாரணை அனைத்தும், ஆதிக்கவாதி களுக்கு சட்டம் வளைந்து கொடுக்கிறது என்கிற எண்ணத்தை உருவாக்கி யுள்ளது என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை தமது அரசு முற்றிலுமாக எதிர்ப்பதாகவும், இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

  • ஜெர்மனியில் நடைபெற உள்ள இந்திய தொழில்முனைவோர் குறித்த நிகழ்வில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கலந்து கொள்வதற்கு, ஜெர்மனி வாழ் இந்தியர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேஜஸ்வி சூர்யா மத வெறியைத் தூண்டும் வகையில் பேசக்கூடியவர். அவர் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு தரக்கூடாது என தெரிவித்து உள்ளனர்.

  • மத்திய பிரதேசத்தில் அன்னுபூர் தொகுதி இடைத் தேர்தல் வருகிற நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் போட்டியிட உள்ள பா.ஜ.க. மாநில அரசின் உணவுத்துறை அமைச்சர் பிசாகுலால் சிங், வாக்காளர்களுக்கு பணம் தருவது வீடியோவில் வெளியாகி மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • உ.பி. ஹாத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்ததற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.


தி ஹிந்து:



  • மோடி அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோத்தாகள், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, மாநில சுயாட்சியைப் பலவீனப் படுத்துகிறது. சட்டத்தின் முன் செல்லுபடியாகாது என மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டியுட் ஆப் சோசியல் சயின்ஸ் பேராசிரியர் ராம் குமார் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

  • மேற்கு வங்க மாநிலம், உ.பி., பீகார் மாநிலம் போல மாஃபியா கும்பலால் நடத்தப்படுகிறது என்ற மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூற்றுக்கு, பா.ஜ.க. ஆளும் மாநிலமான உ.பியும், பீகாரும், மாஃபியா கும்பல்களால் ஆளப்படுகிறது என்ற உண்மையை கூறியதற்கு நன்றி என திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

  • ஆர்.எஸ்.எஸ்., பாஜக, பெண்களை பொருட்களைப் பார்க் கிறது. பிரதமர் மோடி, உபியில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன் கொடுமை குறித்து மவுனம் காக்கிறார் என பிரகாஷ் அம்பேத்கர் சாடியுள்ளார்.

  • உ.பி. ஹாத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதானது, உ.பியில் காட்டாட்சி நடைபெறு வதைக் காட்டுகிறது. ஒரு பக்கம் ராமனுக்குக் கோயிலும் கட்டப் படுகிறது என சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • உ.பி. ஹாத்ராஸ் மற்றும் பல்ராம்பூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து அய். நா. சபையின் இந்தியாவில் உள்ள பிரதிநிதி தனது கவலையை தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா


6.10.2020


No comments:

Post a Comment