டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- இந்திய மருத்துவ ஆணையத்தின் செப்டம்பர் 25ஆம் தேதியிட்ட ஆணையின்படி, மருத்துவம் படிக்காதவர்கள் மருத்துவச் சிகிச்சை செய்திட அனுமதிக்கப்படுதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோன்மனி அகாலி தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பா.ஜ.க.வின் ஜனநாயகமற்ற போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி யேறியதால், இக்கூட்டணி ஜன நாயகமற்ற கூட்டணியாகி விட்டது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.
- பாபர் மசூதி இடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை எனும் தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சியில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதைத்து விட்டது என தலையங்கச் செய்தி கூறுகிறது.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- கரோனா முழு அடைப்பு காரணமாக விமான பயணம் ரத்தானதால், அதற்கு பயணிகள் செலுத்திய கட்டணத்தை உடனே திரும்பத் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
- ஹாத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை கொலையைத் தொடர்ந்து அதே உ.பியில், பல்ராம்பூர் மாவட்டத்தில் மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்துள்ளார்.
- பச்சையப்பன் கல்லூரி டிரஸ்டு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுக் குழு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட முடிவு எடுத்துள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மோடி அரசு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரு கலாச் சாரம் என அறிவித்து, நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கிறது என மதிமுக உயர்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.பி.சாவண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
- உள்துறையின் முன்னாள் செயலாளர் மாதவ் கோட்போலே கூறுகையில், உளவுத்துறையின் அறிக்கை, பாபர் மசூதியை இடிக்க சதி நடக்கிறது என தெளிவாக கூறப்பட்டு உள்ளது. உ.பி.யில் கல்யாண் சிங் ஆட்சியை கலைத்திட வேண் டும் என்ற என் பரிந்துரையை நரசிம்ம ராவ் அரசு ஏற்கவில்லை. அதன்பிறகு எனது பதவியை ராஜினாமா செய்தேன். இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். உரிய முறையில் ஆவணங்களைத் தராக சி.பி.அய். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தி இந்து:
- உ.பி. ஹாத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அலகாபாத் நீதி மன்றம் தானாகவே விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, உரிய பதில் அளிக்க உ.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தங்களது மனசாட்சியை உலுக்கி விட்டது இந்த ஈனச் செயல் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தி டெலிகிராப்:
- பா.ஜ.க. ஆட்சி செய்யும் மோடியின் மாநிலம் குஜராத்தில் ஊரடங்கு காரணமாக ’உள் நாட்டு இடையூறுகள்’ மற்றும் ’பொது அவசர நிலை’ ஏற்பட்டுள்ளதாக காரணம் கூறி, தொழிலாளர்களுக்கு பணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் தரப்படும் கூடுதல் ஊதியம் மற்றும் உரிய ஓய்வு இவை ரத்து செய்யப்படுவதாக குஜராத் அரசு வெளியிட்ட இரண்டு ஆணைகளையும், உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
- குடந்தை கருணா
2.10.2020
No comments:
Post a Comment