பெருநடிகர் விஜய்சேதுபதிக்கு அன்பு வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

பெருநடிகர் விஜய்சேதுபதிக்கு அன்பு வேண்டுகோள்!


கலையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பெற்று தக்க வைத்து வரும் தன்னேரில்லாத தமிழ் நடிகர், தனிப்பெருங்கோ அருமை நண்பர் விஜய் சேதுபதி அவர்களே,


ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தின்போது அவர்களுக்கு விரோதமாக சிங்களப் பேரினவாதத்திற்குத் துணை நின்ற விபீடணன்தான் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தாங்கள் நடிப்பது உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கு வேத னையைத் தரும் விரும்பத்தகாத ஒன்று.


இதை தவிர்ப்பது தங்களுக்கு நல்லது. தொழிலுரிமையில் தலையிடுவது என்பது சரியா என்ற கேள்வி நியாயமானதுதான் என்றாலும், சில விதிகளுக்கு விலக்கு உண்டல்லவா?


கோடரிகளை விட ஆபத்தா னவை கோடரிக் காம்புகள். எனவே, அத்தகைய ஒருவரின் வேடத்தில் நடிப்பதைத் தவிர்த்து தனித்ததோர் அடையாளத்தில் எழுவீராக!


நண்பர் விஜய் சேதுபதிக்கு இனப்படுகொலை எதிர்ப்பாளர்களான அனைத்து மனித நேயர்களின் வேண்டுகோள் இது!


பந்து உங்கள் களத்தில் - முடிவு செய்க!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


15.10.2020


No comments:

Post a Comment