பா.ஜ.க.வின் பார்ப்பனச் சிந்தனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

பா.ஜ.க.வின் பார்ப்பனச் சிந்தனை

’’மாடு மேய்க்கும் குடும் பத்தைச் சேர்ந்த நீ எப்படி ஊடகவியலாளர் பணிக்கு வந்தாய்?" பா.ஜ.க. தலை மைச் செயலக நிருவாகி கேள்வி.


டில்லியைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ஜோதி யாதவ் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட ஜாதியினரை மட்டுமே மிகவும் முக்கிய ஊடகவியலாளர் சந்திப் பிற்கு அழைப்பது பற்றி இவ்வாறு எழுதியிருந்தார். ‘‘நான் ஊடகத்துறையில் நீண்ட நாள்களாக இருக்கி றேன், ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு குறிப்பிட்ட ஜாதியினர் மட் டுமே ஊடகத்தைத் திறமை யாகக் கையாளுகின்றனர் என்னும் நினைப்பில் அவர் களை மட்டுமே அரசின் முக்கியமாக ஊடகவியலா ளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் எதற்கு என்று கேட்கிறார்களோ, என் னவோ! அதாவது எருமை மாடு மேய்க்கும் ஜாதிக்காரர் கள் ஏன் ஊடகத்துறைக்கு வருகிறார்கள்? அவர் களுக்கு எருமைமாடு மேய்க்கும் கலைதான் சிறந் தது என்று கருதுகிறார்களோ என்னவோ!" என்று பதிவிட் டிருந்தார். இதற்கு உட னேயே பா.ஜ.க. தலைமைச் செயலக நிருவாகி இந்து சேத்தன் ஆனந்த் என்பவர் பதில் அளிக்கும் போது, ‘‘உன்னுடைய பரம்பரை எருமை மாடு வளர்த்தது. அப்படி என்றால், உனக்கும் எருமைமாடு மேய்க்கும் வேலைதான் முக்கியம், நீ மாடு மேய்க்கவேண்டும் என்பதற்காகத்தானே மாடு மேய்க்கும் ஜாதியில் பிறந் துள்ளாய்?'' என்று கேட்டுள் ளார்.


இந்தியத் துணைக் கண் டத்தில் ஊடகங்களில் ஊடுருவி ஆதிக்கக் கொடியை நாட்டி அட்ட காசமாக ஆணவச் சிரிப்பை அள்ளிக் கொட்டுவதில் முதல் இடத்தில் இருப்ப வர்கள் பார்ப்பனர்களே!


Centre of Study of Developing Societies
(CSDS) நடத்திய ஆய்வு என்ன கூறுகிறது?


91 விழுக்காடு பார்ப்பனர் களே கொலு வீற்றிருக்கிறார் கள்!


பிற்படுத்தப்பட்டோர் 4 சதவிகிதம்


தாழ்த்தப்பட்டோர் மற் றும் இஸ்லாமியர் பூஜ்ஜியம்


கிறித்தவர்கள் 2.3 சத விகிதம்


இதர பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் 2 சதவிகிதம்


இந்த நிலையில்தான், மாடு மேய்ப்பாளன் பத்திரி கைத் துறைக்கு எப்படி வர லாம் என்று கேட்கத்தானே செய்வார்கள்?


எதிர்நிலை எடுக்க வேண்டியது நாம்தான்!


 - மயிலாடன்


No comments:

Post a Comment