மும்பையில் உள்ள கொலபா பகுதி யில் மராட்டி எழுத்தாளர் ரூபா என்பவர் காதணி ஒன்றை வாங்கச் சென்றுள்ளார் அவருக்குப் பிடித்த மராட்டி கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் காதணி ஒன்றைக் கேட்டு உள்ளார். அதற்கு கடைக்காரர், "அது எல்லாம் மராட்டி நகைக்கடைக்காரரிடம் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் மராட்டி மொழியில் பேசிய எழுத்தாளரை அவமதிக்கும் விதமாக, "இங்கு இந்தி பேசுங்கள், மராட்டி பேச வேண்டுமென்றால் மராட்டிக்காரர் நடத்தும் கடைக்குச் செல்லுங்கள்" என்று திமிரோடு பேசி ஊழியர்களை அழைத்து அவரை வெளியேற்றக் கூறியுள்ளார்.
தனது மாநிலத்தில் அந்நியர் ஒருவ ரால் அவமானப்பட்டதை கண்டு மனம் வேதனைப் பட்டு, "கடைக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்கும் வரை நான் இங்கி ருந்து நகரமாட்டேன்" என்று கூறி கடைக்கு முன்னால் தனி மனிதராக போராட்டம் நடத்த துவங்கினார். 5:00 மணிக்கு அவர் போராடத்துவங்கிய உடன் கடைக்காரர் கடையை மூடிவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அவர் போராட்டத்தை நிறுத்த வில்லை. நள்ளிரவு முடிந்து அதிகாலை 2:00 மணிவரை அவர் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.
அப்பகுதியில் காவல்துறையினர் அவருக்குப் பாதுகாப்பாக நின்றனர். இந்த நிலையில் கடைக்காரிடம் காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து அவர் அதிகாலையில் போராட்டம் செய்துகொண்டு இருந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டார்.
அந்தப் பெண், "எனக்கு கடைக்காரர் மீது கோபமோ பகைமையோ கிடையாது. எனது மாநிலத்தின் தலைநகரில் என்னி டம் மராட்டியில் பேசவேண்டுமென்றால் மராட்டிக் காரர் நடத்தும் கடைக்குச் செல் என்று என்னை விரட்டியது என்னை மட்டுமல்ல, மராட்டியர் அனைவரை யுமே இழிவுபடுத்தியதாகும்" என்று கூறினார் .
பிறகு அவரை அதிகாலையில் மருத் துவப் பரிசோதனைக்கு காவல் துறை யினர் அழைத்துச் சென்றனர். அவர் கடைக்காரர் மீது புகார் எதுவும் அளிக் காததால் காவல்துறையினர் கடைக்காரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மராட்டிய நவநிர்மான் சேனா மற்றும் அப்பகுதியில் வாழும் மராட் டியர்கள் "இனி கடைக்காரர் மராட்டியைக் கற்றுகொண்ட பிறகு கடைக்கு வாருங்கள். அதுவரை மராட்டியர் ஒருவரை பணிக்கு வையுங்கள்" என்று அறிவுரை கூறினர்.
No comments:
Post a Comment