அவசர அவசரமாக உடலை ஏன் எரித்தீர்கள், மாவட்ட ஆட்சியாளருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரிக்க ஆணையிட்டது சட்டவிரோதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

அவசர அவசரமாக உடலை ஏன் எரித்தீர்கள், மாவட்ட ஆட்சியாளருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரிக்க ஆணையிட்டது சட்டவிரோதம்!

அவசர அவசரமாக உடலை ஏன் எரித்தீர்கள்? 


மாவட்ட ஆட்சியாளருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரிக்க ஆணையிட்டது சட்டவிரோதம்!


உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்


லக்னோ, அக்.14 ஹத்ராஸ் வழக்கில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு,பாலியல்வன்கொடுமைசெய் யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறும் 19 வயது தாழ்த்தப்பட்ட பெண்ணின் பெற்றோர், அலகா பாத் உயர்நீதிமன்றத்தில், “எங்கள் பெண்ணின் உடல் தகனம், எங்களின் விருப்பத்திற்கு மாறாக நடத்தப்பட்டது'' என்று கூறியுள்ளனர். அப்பெண் நான்கு உயர் ஜாதி ஆண்களால் இந்த வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று கூறினர் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரப்பிரதேச அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.


உத்தரப்பிரதேசம்ஹத்ராஸ்பகுதியில்19 வயது தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள சாமியார் ஆதித்யநாத்தின் உறவினர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அலகா பாத் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.


வழக்கின் விசாரணையின் போது ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகம் குடும்பத்தினரின் அவர்களின் வேண்டுகோளுக்கு மாறாக, அப்பெண்ணின் உடலை எரித்ததாகக் கூறியுள்ளனர் என்று மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் நரைன் மாத்தூர் கூறினார்.  அவர் இந்த வழக்கில் நீதிமன்ற அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அவருடைய அறிக்கையில், ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ப்ரவீன்குமார் லக்‌ஷர், நீதிமன்றத்தில், அடுத்த நாள் ஏற்பட இருந்த மிகப் பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அதிகாலையில்அப்பெண்ணின்உடல்எரியூட் டப்பட்டதாகக் கூறினார். இதற்கான ஆணையை அவர் லக்னோவில் இருந்து பெறாமல், தன்னிச்சையாக இந்த முடிவை மேற்கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.


 அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இந்த வழக்கினை, உத்தரப்பிரதேசத்தில்  இருந்து டில்லிக்கோ அல்லது மும்பைக்கோ மாற்ற வேண்டும் என்று விரும்புவதாக அப்பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷீமா குஷ் வாஹாகூறியுள்ளார்.மேலும்அக்குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்றும், விசாரணை முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் பெற்றோர்கள் மட்டுமின்றி, சகோதரர்கள் மற்றும் அண்ணிகளும் உடன் இருந்தனர். அவர்கள் அனைவரிடம் இருந்தும் அறிக்கைகள் பெறப்பட்டது.


செப்டம்பர் 14 ஆம் தேதி, 19 வயது பெண் தாக்கப்பட்டு நான்கு உயர்ஜாதி இளை ஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக் கப்பட்டதாக பெண்ணிடம்  செப்டம்பர் 22 ஆம் தேதி  இருந்து வாக்குமூலம் பெறப் பட்டது. பிறகு முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கான பிரிவுகளும் இணைக்கப்பட்டது. பிறகு 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். அப்பெண் டில்லி ஜப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய உடல் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு முன்பே, உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில், அவசர அவசரமாக எரியூட்டப்பட்டது.


விரைவாக நடத்தப்பட்ட தகனத்தை தொடர்ந்து, தானாக முன் வந்து வழக்கினை விசாரித்தது அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வு. அக்டோபர் 12 ஆம் தேதி அனைத்து மாநில மூத்த அதிகாரிகளையும், காவல் துறை யினரையும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியது. அந்த அமர்வு, அப்பெண்ணின் உறவினர்களையும் வர உத்தரவு பிறப்பித்தது. அப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமில்லாமல் ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர், உத்தர பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவ னிஷ் குமார் அவஸ்தி, காவல்துறை இயக்குநர் எச்.சி. அவஸ்தி, கூடுதல் டி.ஜி. (சட்ட ஒழுங்கு) பிரசாந்த் குமார் மற்றும் ஹத்ராஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ் வால் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரா னார்கள். இந்த வழக்குடிவிசன்பெஞ்ச் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ரஞ்சன் ராய் ஆகியோர் முன் னிலையில் விசாரணைக்கு வந்தது.  அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 2 ஆம் தேதி நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment