உ.பி. அரசை அகற்றுமா உச்சநீதிமன்றம்?
லக்னோ அக் 15 உத்திரப் பிரதேசத் தில் சித்திரகூட் நகருக்கு அருகில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வில் அந்த ஊரின் பாஜக பிரமுகரும் பஞ்சாயத்து தலைவரின் மகன் மற்றும் அவருடன் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
ஹத்ராஸ் 19 வயது தாழ்த்தப்பட்ட மாணவி கொலை செய்யப்பட்டு அரசு பயங்கரவாதத்தாலே எரிக்கப் பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அந்த நிகழ்விற்கு பிறகு 20-க்கும் மேற்பட்ட பல பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக நடந்துள்ளது,
இந்த நிலையில் இரண்டு நாட் களுக்கு முன்பு அங்குள்ள கோண்டா நகரத்திற்கு அருகே வீட்டின் மாடி யில் தூங்கிக்கொண்டிருந்த 3 சகோ தரிகள் திராவக வீச்சில் காயம் அடைந்தனர்.
இது இரண்டு பெண்களின் கண் பார்வை பறிபோது ஒருவரது முகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந் துள்ளது தெரியவந்திருக்கிறது.
சித்ரகூட் நகரத்திற்கு அருகே 15 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமி 3 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள் ளாள். பின்பு, குற்றவாளிகள் அவளது கை, கால்களை கட்டி சிறுமியின் வீட்டின் அருகே கொண்டுவந்து போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் கடந்த 7-ஆம் தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் நடந் ததாக அவளது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித் துள்ளனர். ஆனால் புகாரை வாங் காமல் புறக்கணித்து வந்த நிலையில் அந்த சிறுமி அய்யத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார்.
அதற்கு பிறகு காவல்துறையினரால் புகார் ஏற்கப்பட்டு அந்த கிராம தலைவரின் மகன் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்புச் சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பாது காப்பு சட்டங்கள் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
“உடற்கூறு பரிசோதனையில் சிறுமி பாலியல்வன்கொடுமை செய்த அடையாளம் எதுவும் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள் ளனர். ஹத்ராஸ் நிகழ்விலும் 11 நாட்களுக்கு பிறகு பெண்ணின் வாக்குமூலம் பெறப்பட்டு உடலை சோதனை நடத்தி பாலியல் வன்கொடுமை நடந்த தடயங்கள் கிடைக்கவில்லை. ஆகவே அப்பெண் பாலியல்வன்கொடுமை செய்யப்பட வில்லை என்று காவல்துறை கூறியது, ஆனால் அந்தப் பெண்ணே உயி ரோடு இருக்கும் போது விசாரணை நீதிபதி முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாக கூறி யுள்ளார். ஆனால் விசாரணை நீதிபதி அதை சரியாக பதிவு செய்யவில்லை என்று பெண்ணின் பெற்றோர் கூறினர். தற்போதும் அதே போல் காவல்துறையினர் 15 வயது சிறுமி விவகாரத்திலும் 7 நாட்கள் கழித்து அவர் மரணமடைந்த பிறகு பாலியல்வன்கொடுமை நடந்ததுள்ளதா என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதனால் அரசும் நிர்வாகமும் வேண்டுமென்றே குற்றவாளிகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. ஏற்கெனவே உத்தரப் பிர தேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான அரசை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அங்கு பெண்கள் வாழவே முடியாத சூழல் நிலவுவதால் இனியும் சாமியார் முதல்வர் பதவியில் இருக்க உச்சநீதி மன்றம் அனுமதிக்க கூடாது மகளிர் நல அமைப்புகள் கூறிவருகிறது.
No comments:
Post a Comment