இது உண்மையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

இது உண்மையா

இது உண்மையா?


இட ஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அடிப்படையை ஏற்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் கிடையாது. 2019 இல் மத்திய அரசு கொண்டு வந்து அவசர கதியில் அய்ந்தே நாள்களில் நிறைவேற்றிய 10 சதவிகித இட ஒதுக்கீடு - முன்னேறிய ஜாதியினரில் மெலிந்த பிரிவினர் என்ற சாக்கில், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் புகுத்திய சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்று செயல்படுத்தவில்லை.


(இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு தவறானது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கு முரணானது என்பதை வலியுறுத்தி, அது செல்லாது என்று தீர்ப்பளிக்கக் கோரும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளன).


அதனைக் காட்டி, 10 சதவிகித பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஏற்றால்தான், 7.5 சதவிகித அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் என்பதற்கு ஒப்புதல் அளிப்பேன் என்று மத்திய அரசு தரப்பில் தமிழக ஆளுநர் பேரம் பேசுவதாக, உத்தியோக வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகிறதே - தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவை மாற்றப் போகிறதா?


இது உண்மையா?


No comments:

Post a Comment