முதல்வர் ஒருபுறம், ஆளுநர் மறுபுறம் என தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது : முத்தரசன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

முதல்வர் ஒருபுறம், ஆளுநர் மறுபுறம் என தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது : முத்தரசன் குற்றச்சாட்டு


நாகை, அக்.22 தமிழகத்தில் முதல்வர் ஆட்சி ஒரு புறமும், ஆளுநர் ஆட்சி மறுபுறமும் என இரட்டை ஆட்சி நடக்கிறது என்று முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.


நாகை அருகே கீழையூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று  (21.10.2020) நடந்தது. இதில், கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து தெரிவித்துள்ளார். மூத்த அமைச்சர்கள் 5 பேரை அனுப்பி வைத்துள்ளார்.


இந்த தீர்மானத்தை பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற் றுள்ளது. ஆனால் ஆளுநர் இது வரை கையொப்பம் போடவில்லை. ஆளுநர் முடிவு தெரியாமல் நீதி மன்றம் இதை நிறுத்தி வைத்துள்ளது. எனவே தமிழக மக்கள் நலன் கருதி ஆளுநர் உடனே கையொப்பம் இட வேண்டும். தமிழகத்தில் ஆளுநர் சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசின் முகவராக தான் செயல்படுகிறார். ஆளுநர் தன் னிச்சையாக ஏற்கனவே ஆய்வு செய்தார். இதை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் அதை அவர் கைவிட்டார். ஆர்எஸ்எஸ் நாட்டை ஆட்சி செய்கிறது. அதன் பிரதிநிதியாக ஆளுநர் தமிழகத்தில் ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஒரு புறமும், ஆளுநர் ஆட்சி மறுபுறமும் என்று இரட்டை ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment