மருத்துவர்கள், தான் அரசியலில் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது உடல்நலம் குறித்து சமூக வலைத் தளங்களில் அவர் பெயரில் வந்த அறிக்கை போலியானது. ஆனால், அதில் உள்ள கருத்துகள் உடல்நிலைபற்றியது (அப்பட்டமான) உண்மைதான் என்று கூறியுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து இவ்வளவு துல்லியமாக எவர் போலி அறிக்கையில் வெளியிட்டாரோ அவர்மீது நியாயமாக அவருக்கு வரவேண்டிய அறக்கோபம் ஏன் வரவில்லை? ஏன் காவல்துறையிடம் அவரோ, அவர் சார்பிலோ இந்தக் ‘குற்றவாளியை'க் கண்டறிய புகார் மனு கொடுக்கப்படவில்லை? இது திட்டமிட்டே வெளியிடப்பட்ட கடிதமோ என்ற கேள்வி இயல்பாக எழும்புகின்றது.
ஒரே ஒரு நாளேடு (‘டெக்கான் கிரானிக்கல்') மாத்திரம் திட்டமிட்டே இக்கடிதம் வெளியிடப்பட்டிருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால், நம்மூர் ஊடகங்கள் இப்படியெல்லாம் அவரிடம் கேள்வி கேட்கமாட்டார்கள்!
‘வாழ்க ஊடக தர்மம்!'
No comments:
Post a Comment