அருப்புக்கோட்டை ஒன்றிய ப.க. அமைப்பாளர் வே.வேங்கட சுப்பையன் - மணிமேகலை இணையரது மகள் வே.பொன்னி, மதுரை சி.முருகன் - விநாயகமுத்து இணையரது மகன் மு.சிவபிரகாஷ், இவர்களது மணவிழா (30.8.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500, அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதி ரூ.500, விடுதலை அரையாண்டுச் சந்தா ரூ.900 நன்கொடை வழங்கினர்.
- - - - -
அருப்புக்கோட்டை சீரிய பகுத்தறிவாளர் ஆயை.மு.காசாமைதீன் அவர்களது பேத்தியும், க.முகம்மது ராஜா - வசீலாபானு இணையரது மகளுமான மு.ஆயிஷாமல்லிகை, ஜம்மு காஷ்மீர் முஸ்தாக் அகமதுலோன் - ரஜியாபேகம் இணையரது மகன் மு.ஜுனைத்முஸ் தாக்லோன், இவர்களது மணவிழா அருப்புக்கோட்டை மீரா மல்லிகை அரங்கில் 20.9.2020 ஞாயிறு காலை 11 மணியளவில் நடைபெற்றது. ப.க. புரவலர் ந.ஆனந்தம், கழக மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் மற்றும் தோழர்கள், உற்றார், உறவினர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கழகம் சார்பில் இயக்க நூல்கள் பரிசளிக்கப்பட்டது. மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500, அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதி ரூ.500 நன்கொடை வழங்கினர்.
No comments:
Post a Comment