கேள்வி கேட்காமல் அறிவு வளர்ச்சி பெற முடியுமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

கேள்வி கேட்காமல் அறிவு வளர்ச்சி பெற முடியுமா

கேள்வி கேட்காமல் அறிவு வளர்ச்சி பெற முடியுமா?


ரொமிலா தாபர்


கேள்வி:  புதிய மொழிமரபுத் திறன் மாற்றுச் சொல் லாடல்களை உருவாக்கி நாகரிகங்களைக் கட்டமைப் பதில் பகுத்தாய்வு, கருத்து வேறுபாடு, கருத்து மாறுபாடு எவ்வாறு பங்களித்துள்ளன?


பதில்:  ஓர் எடுத்துக்காட்டுடன் அதனை விளக்கு வதற்கு தயவு செய்து என்னை அனுமதிக்கவும். சமணர்கள், புத்தர்கள், ஜைனர்கள் மற்றும் குறிப்பாக அஜிவிகாசினர் என்ற பல்வேறுபட்ட பிரிவினரி டையே மிகப் பெரிய கருத்து வேறுபாடு எழுந்தபோது, வேதகால பார்ப்பனியத்தின் முக்கியமான கோட் பாடுகளில் இருந்து மாறுபட்டு, அவற்றில் சிலவற்றைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. எடுத்துக் காட்டாக அவர்கள் கடைப்பிடித்த உருவ வழிபாட்டைப் பற்றியும், வேதங்கள் தெய்வத்தால் அருளப்பட்டவை என்னும் கருத்தைப் பற்றியும்,  யாக சடங்குகள் கடைப்பிடிப்பதால் விளையும் நன்மைகள் பற்றியும் கேள்விகள்  பல கேட்கப்பட்டன. இவ்வாறு கடவுளை நம்புபவர்களுக்கு இடையேயும், நம்பாதவர்களுக்கு இடையேயும் இருவேறு நேர் எதிர் கருத்துகள் தோன்றின. சமணர்களை நாத்திகர்கள் - தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் என்று பார்ப்பனர்கள் குறிப் பிட்டனர். இவை இரண்டும்  சமமாகப் பயணிக்கும் இரண்டு நம்பிக்கை ஓடைகளாக ஆகிவிட்டன என்பதைப் பற்றி எனது நூலில் எடுத்துக் காட்டுவதற்கு நான் முயற்சித்துள்ளேன்.


சமணர்களின் மிகப் பெரியதும், முக்கியமானது மான அமைப்பாக இருந்த தலைமைத் துறவி மற்றும் மடம் என்பவை இந்திய சமூகத்துக்குப் புதியவை யாகும். மதத்தைப் பரப்பும் அமைப்புகளை உருவாக் கும் கருத்தினால் கவரப்பட்ட இதர மதத்தினரும் அத்தகைய அமைப்புகளை உருவாக்கியதுடன், அவற்றிற்கு சில சமூகப் பங்களிப்பையும் நிர்ணயித்தனர். இத்தகைய மத அமைப்புகள் மூலம் எவ்வாறு சமூகங்களை மதங்கள் கட்டுப்படுத்தின என்பது,  விகாரங்கள், கோயில்கள், ஆசிரமங்கள், கன்காசுகள் மற்றும் குருத்துவாரங்களின் வரலாற்றில் இருந்தும், ஒவ்வொரு அமைப்புக்கும் புரவலர்களின் ஆதரவைத் திரட்டியதில்  இருந்தும் வெளிப்படை யாகத் தெரிபவைகளாக ஆகிவிட்டன. இவையே தெய்வ வழிபாட்டுக்கான இடமாகவும், சமூகக் கட்டுப் பாட்டை உருவாக்கி நிலை பெறச் செய்யும் அமைப்பு களாகவும் ஆகிவிட்டன.


கி.மு. 16 ஆவது நூற்றாண்டு சமஸ்கிருத பாடம் ஒன்றில், சமணர்களையும், துருக்கியர் என்ற சொல் பயன்படுத்தப்படும் முஸ்லிம்களையும் ஒரு நாத்திகப் பிரிவாகப் பிரித்துக் காட்டியிருப்பதுடன்,  அவர்கள் மீது மிலேச்சர்கள் என்ற முத்திரையினையும் குத்தி னர். அவர்களது கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு ஒத்துப் போகாதவர்கள், சமூகத்தில் நல்லதொரு இடத்தைப் பெற்றிருந்தவர்களாக அவர்கள் இருந்தா லும் சரி, அவர்களை அடையாளம் காண்பது கருத்து வேறுபாட்டுக்கான மிகச் சரியான எடுத்துக் காட்டாக விளங்குவதாகும். புதிது புதிதாக கேள்விகள் கேட் கப்பட்டு, புதிய புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு, புதிய வடிவங்களிலான புரவலர்கள் தோன்றத் தொடங்கினர். சமூக நடைமுறையினால் ஊக்குவிக்கப் பட்ட கருத்து வேறுபாடுகள் கொண்ட குழுக்கள் சனா தனிகளாக ஆகிவிட்டனர். போற்றத் தகுந்த பாடங்கள் கொண்டதொரு அமைப்பு என்ற அளவில் மட்டுமே வரையறை செய்யப்படாமல்,  கருத்து வேறுபாட்டின் மூலம்  மதம் சமூகத்தை வடிவமைப்பதுடன், சமூகத்தி னால் மதமும் வடிவமைக்கப்படுகின்றன.


கேள்வி : நாம் வாழும் உலகைப் பற்றிய கேள்விகளைக் கேட்காமலேயே அறிவு வளர்ச்சியில் நாம் முன்னேற்றம் அடைய இயலாதா?


பதில்:  கேள்விகள் கேட்கப்படுவதை அனுமதிக்க மறுப்பதே, சமூகத்தை நிலை தடுமாறச் செய்து,  அமைப்புகளை கலைப்பதற்கான ஒரு வழியாகும். பகுத்தாய்வு மேற்கொள்வது என்பது நாகரிகத்தின் இன்றி அமையாததொரு கூறு என்பது நாகரிகங்களின் வரலாறுகளில் இருந்து சான்று பூர்வமாகத் தெரிய வருகிறது. தத்துவ இயல் சிந்தனையிலும்,  தோற்ற மளிக்கும் புதிய வடிவங்களிலும், புதிய இலக்கியங் களிலும்  ஓர் உயர்ந்த நிலையை அவை பதிவு செய் கின்றன. கடந்த கால தொகுப்பில் இருந்து அறியப் பட்டு இருப்பவைகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்கும் இந்த நடைமுறை படைப்பாற்றல் கொண்ட தீர்வுகளை அளிக்கிறது.


இந்த நாகரிகங்கள் எல்லாம் தனித்தனியாக முன்னேற்றம் அடைந்தன என்று முன்னம் கருதப் பட்டது. அதற்கு மாறாக நாகரிகங்கள் பரவ இயன் றவை என்பதை இப்போது நாம் அறிந்திருக்கிறோம். பல்வேறுபட்ட நாகரிகங்களுடன் கலந்தாய்வு செய் வதற்கு அறிவுக் கூர்மை தேவை. எடுத்துக் காட்டாக, முதல் கி.பி. ஆயிரமாண்டில் உரேஷியா நாடு முழுவதிலும் இருந்த வான இயலாளர்களும், கணித மேதைகளும், மனமகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு கலந்துரையாடலை, அறிவுப் பரிமாற்றத்தை மேற் கொண்டதைக் குறிப்பிடலாம். இது புதிய கேள்விகள் கேட்கப்படுவதை ஊக்குவித்ததுடன், அவற்றுக்கான மேம்படுத்தப்பட்ட விளக்கங்களுக்கும், சில நேரங் களில் சமூக மாற்றத்துக்கான புதிய தொழில் நுட்பங் களுக்கும் வழி கோலச்  செய்தது. எடுத்துக் காட்டாக, இவ்வாறு கேள்விகள் கேட்கப் பட்டதன் பயனாக  கண்டுபிடிக்கப்பட்ட விண்வெளி பரிசோதனை சாலைகள் கடல் பயணத்தை எளிதானதாக ஆக்கிய தால், அது உரேஷியாவின் வர்த்தகத்தில் பெருமளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.


கேள்வி : ஷகீன் பாக் போராட்டப் பெண்களின் வன்முறையற்ற கருத்து மாறுபட்ட குரல்கள் மேலும் பலமாக ஒலித்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? காந்தியைப் பற்றி அது ஏன் உங்களுக்கு நினைவூட்டியது?


பதில்:  வன்முறைச் செயல்கள் கலந்து விடாமல் இருந்தால், கருத்து வேறுபாட்டுக் குரல்கள் தனித்த ஆற்றல் மிகுந்தவையாக இருப்பவையே ஆகும். அவ்வாறன்றி வன்முறை செயல்கள் கலந்திருந்தால், அத்துடன் சேர்த்து கருத்து வேறுபாடும் கூட சமூகத் தால் நிராகரிக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது. அதன்தோற்றம் எங்கே இருந்தாலும் சரி, வன்முறை என்பது, தீவிரவாதத்தை வளர்த்து,  கட்டுப்படுத்த முடியாத பேரழிவிற்கு வழி வகுக்கவே செய்யும். கருத்து மாறுபடுபவர்கள் கருத்து மாறுபடுவதற்கான உரிமையை பொதுவாக தார்மிக அடிப்படையில் இருந்து பெறுகின்றனரே அன்றி, வன்முறையில் இருந்து பெறுவதில்லை. அரசு அதிகார வர்க்கம் தங்களின் தார்மிக அதிகாரத்தை இழந்துவிடும்போது, கருத்து வேறுபாட்டின் குரலை அடக்கும் முயற்சியாக வன்முறைச் செயல்களில் அது ஈடுபடக்கூடும். நாட் டில் அவசர கால நிலை பிரகடனப்படுத்திய போது அத்தகைய வன்முறைச் செயல்களை நாம் எதிர் கொண்டுள்ளோம்.  மறுபடியும் அது இப்போது தலை காட்டுகிறதா என்று பலரும் கேட்கின்றனர்.


பிமா கொரேகான் கூட்டத்தில் நடந்த கலவரங் களில் பங்கெடுத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டப் பட்டட 11 தீவிர தொண்டர்களில் 9 பேர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களுடன் மேலும் சிலர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக எந்த ஒரு விசார ணையும் நடத்தப்பட வில்லை. ஆட் கொணர்வு மனு எதுவும் அனுமதிக்கப்படவுமில்லை. குறிப்பிடப்பட்ட அந்த பிமா கொரேகான் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவோ, பேசவோ செய்யவில்லை. சமூக நீதி தேவைப்படும் இடத்தில் இருந்து நீண்ட தொரு தொலைவில் இருந்த மற்றொரு இடத்தில் அதற்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டனர். என்றாலும், அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட மத அடையாளம் கொண்ட மக்களை சுட்டுக் கொல்லும் படி வலியுறுத்தி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை கேட்டுக் கொண்டவர்கள் எல்லாம் அதிகாரத்தை நிலை நாட்டும் அதே பாது காவலர்களால் தொடப் படவும் இல்லை. கருத்து பாகுபாடு என்பது அதிகாரி களைப் பற்றிய மிகப் பெரிய அச்சத்தை மக்களிடையே உருவாக்கி வளர்ப்பதாகும்.


காந்தியைப் பற்றியும், அவரது காலத்தைப் பற்றியும் அதன் மூலம் எனது இளமைக் காலம் பற்றியும் எனக்கு ஏன் இன்று நினைவு வந்தது என்று என்னை நீங்கள் கேட்டீர்கள். அதிகாரத்தைப் பற்றிய அச்சம் முந்தைய நிகழ்வுகள் பற்றிய நினைவுகளைக் கொண்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க வேண்டியவர் களாக காந்தியும் மற்ற தலைவர்களும் இருந்தனர். சத்யாகிரகம் என்ற வடிவத்தின் மூலம் தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மக்களுக்கு ஒரு மாற்று வழியை அவர்கள் அளித்தனர். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான தேசியவாதிகளின் பொதுக் கூட்டங்களுக்கு நாங்கள் செல்வது வழக்கம். இத்த கைய கூட்டங்களில் திரும்பத் திரும்ப ஒலிக்கப்படும் இன்குலாப் ஜிந்தா பாத் போன்ற முழக்கங்கள் இன்றும் கூட என்னை உணர்ச்சி வசப்பட வைக்கின்றன. கருத்து வேறுபாடு கண்ணுக்குத் தெரிவதாக, ஆனால் அதே நேரத்தில் வன்முறை அற்றதாக இருக்க வேண்டும். அது போலவே, ஷகீன் பாகின் கருத்து வேறுபாடு நன்றாகக் கண்ணுக்குத் தெரிவதாகவும், வன்முறை அற்றதாகவும் இருந்தது.


கேள்வி : ஆங்கிலேயரின் காலனி ஆட்சி மதத்தை எவ்வாறு பாதித்தது?


பதில்:  இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதம் பற்றிய காலனி ஆட்சியாளரின் கருத்துருவாக்கம் நவீன காலத்துக்கு முந்தைய கண்ணோட்டத்தில் இருந்து மாறுபட்டதாகும். முஸ்லிம்கள், கிறித்தவர்கள்  தவிர மற்ற அனைத்து மதப் பிரிவு மக்களும் இந்துக்கள் என்று ஒட்டு மொத்தமாக அழைக்கப்பட்டனர். ஒரே வடிவிலான,  நல்லிணக்கத்துடன் செயல்படும் மிகப் பெரிய மதமாக இந்து மதத்தை அதன் வரலாறு கட்டமைத்திருந்தது. நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வில் ஒரு வளமான கருத்து மாறுபாட்டுக்கு ஆதரவு அளிப்பதற்கும்,  ஜாதி மற்றும் உட்பிரிவுகளி டையே இணைப்புகளை உருவாக்குவதற்கும் மிகச் சிறிய அளவில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இருந்த மதத்தைப் பற்றிய அனுபவம் இந்தியாவில் மாறுபட்ட ஒரு முறையில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும். இந்த மாறுபாட்டுக்கு ஏற்றபடி ஒத்திசைந்ததாக இருக்க இயன்ற பல்வேறுபட்ட நம்பிக்கை நடைமுறை களைக் கொண்டதாக இந்திய கலாச்சாரம் இருந்தது. மற்ற மதத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது, அவர்களது கருத்துகளை ஏற்பது அல்லது மறுப்பது என்பதில் அடங்கியிருக்கும் அதன் வளமை மய்ய ஆர்வம் அளிப்பதாக இருப்பதல்ல. இந்து மதத்தைப் பற்றிய இத்தகைய காலனி ஆட்சியாளரின் மறு கட்டமைப்பு இப்போது ஆழ்ந்த வேர் விட்டு, இந்து ராஷ்டிராவை நியாயப்படுத்தும் ஒரு அரசியல் செயல் திட்டம் கொண்ட இந்துத்துவா என்ற ஒரு கோட் பாடாக உருவாக்கப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட் டது.


கேள்வி: இத்தகைய நிச்சயமற்ற தன்மைகள் உங்களது உணர்வுகளை மிகப் பெரிய அளவில்  பாதிக்கவிடாமல் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டீர் கள்?


பதில்:  நன்னெறிக் கோட்பாடு பற்றிய ஒரு பல மான உணர்வையும்,  மனிதஇன சூழ்நிலையைப் பற்றிய ஓர் ஆழ்ந்த கவலையையும்,  நம் ஒவ்வொ ருவருக்கும் மேலானதாக  இருக்குமாறு செய்யப்பட வேண்டும் என்ற அக்கறையும் கொண்ட ஒரு சமூகமாக நாம் இருந்த காலம் ஒன்றும் இருந்தது என்பதைப் பற்றி எனக்கு நானே நினைவு படுத்திக் கொண்டே இருந்தேன். கடந்த அரை நூற்றாண்டு காலமாகவோ அல்லது ஒரு சில ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலோ நடைபெற்ற பேச்சு வார்த்தை கள், உரையாடல்களை நினைவு கூர்வதன் மூலம் இந்த உணர்வு வரும்.  இத்தகைய விவகாரங்களைப் பற்றிய பேச்சு வார்த்தை அவற்றின் முக்கியத்துவத்தை உறுதிப் படுத்துகிறது. இப்போது நாம் ஒரு மாறுபட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கலவர மந்தைகளின் வன்முறை நமது விரல் நுனிகளில் உள்ளன. தேவையை ஒட்டியே நீதியைப் பற்றிய கண் ணோட்டங்கள் உருவாக்கிக் கொள்ளப் படுகின்றன. லஞ்ச ஊழலின் கொடிய கரங்கள் சட்டத்தையே கைப்பற்றிக் கொண்டுள்ளன. இத்தகைய நிச்சயமற்ற காலங்களில், எதிர்காலத்தைப் பற்றி நான் கொண்டி ருக்கும் நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, நீண்ட கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிடும் நடைமுறைக்கு நான் திரும்பு கிறேன். வெறுப்புணர்வின் இடத்தில் அன்பு மாற்றி அமைக்கப்படவேண்டும் என்றும், சமூக பழக்க வழக்கங்களில் பரிவும், கருணையும் வன்முறையை மறுதளிக்க வேண்டும் என்றும் வாதாடி வந்துள்ளவர் களின் நீண்டதொரு பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம்.  இவைதான் இன்று கருத்து வேறுபாட்டின் குரல் களாக ஆகியுள்ளன. ஆனால்,  எதிர்காலம் என்ன வாக இருந்தாலும் சரி, இத்தகைய கருத்து வேறுபாட் டுக் குரல்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே  இருக் கட்டும்.


நன்றி: ‘தி இந்து', 11.10.2020


தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment