குழந்தைப் பருவத்தில் மின்னணு ஊடகப் பயன்பாடு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
8 முதல் 11 வயதுடைய குழந்தை களிடம் எடுத்த புதிய ஆய்வுகளின் படி தொலைக்காட்சி, கணினி மற்றும் மொபைல் பயன்படுத்துவதால் அவர்களின் நினைவுத்திறம் மற்றும் வாசிப்புத் திறனும் பாதிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர் னில் உள்ள முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் லிசா முண்டி அவரது மாணவர்கள் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவை 'பிளஸ் ஒன்' என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
எட்டு அல்லது ஒன்பது வயதில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தொலைக்காட் சியைப் பார்ப்பவர்களை அப்படிப் பார்க்காத அதே வயது உடைய பிற குழந்தைகளோடு ஒப்பிடும்போது கற்றல் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் குணம் பாதிக்கப்படுகிறது என்று ஆய் வாளர்கள் கண்டறிந்தனர்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத் திற்கும் மேலாக ஒரு கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்து வது இதேபோன்ற பாதிப்பை ஏற்படுத் தும். வீடியோ கேம்களின் பயன்பாடு கல்விச் செயல்திறனைப் பாதிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள் பெற்றோர் களும், ஆசிரியர்களும், மருத்துவர் களும் குழந்தைப் பருவத்தில் மின்னணு ஊடகப் பயன்பாட்டிற்கான புதிய அட்டவணைகளைப் பரிந்துரைக்க உதவும். குழந்தைகளின் மேற்கல்வி யில் தொடர்ச்சியான செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம் மேலும் பல ஆய்வு முடிவுகள் வெளிவரலாம் என் றும் தெரிய வருகிறது.
No comments:
Post a Comment