டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- கரோனா தொற்று காரணமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் டில்லி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து தங்கள் ஊர் திரும்பிய போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டிய அலட்சியம், மாநிலத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனை பாஜக பயன்படுத்திக் கொண்டு, இதுவரை அந்த மாநிலத்தில் முதல்வராக ஆக முடியவில்லையே என்ற கனவை பாஜக நிறைவேற்றிக் கொள்ளுமா? என்ற கேள்வியை தனது கட்டுரையில் எழுப்பியுள்ளார் எழுத்தாளர் ஆனந்த் கே.சகாய்.
- துளு மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடாக மாநில சட்ட மன்ற உறுப்பினர் தனது அலுவலக பலகையில் துளு மொழியில் எழுதி வைத்துள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- 2021 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
- மனுஸ்மிரிதியில் பெண்கள் பற்றி தரக்குறைவாக உள்ளதை வி.சி.க. தலைவர் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை திரித்து பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பொய்யான குற்றச்சாட்டைச் சொல் கிறது. அதற்கு ஆளும் கட்சியான அதிமுக துணை போகிறது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகரி கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- இந்திய சிறப்புத் திருமணச் சட்டம் 1954இல் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்வதற்கு வழிவகை செய்தாலும், அது குறித்து பொதுமக்கள் கருத்தினை 30 நாட்களுக்குள் தரலாம் என்கிற அறிவிப்பு, இத்தகைய திருமணம் செய்வோருக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆகவே அந்த பிரிவினை நீக்க வேண்டும் என நிதா ரக்மான் - மோகன்லால் தம்பதியர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
- வறுமையும், கொலை குற்றங்களும் பீகாரில் தலைவிரித்தாடு வதை மக்கள் அமைதியோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் கள் அமைதியைக் கலைந்து தற்போது நடக்கும் நிதிஷ்குமார் ஆட் சியைத் தூக்கி எறியும் அதிகாரம் வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- வருமான வரி தாக்கல் செய்வதற்கான கெடுவை டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதே போன்று சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜி.எஸ்.டி.) ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வதற் கான கெடுவும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- நீட் தேர்வில் ஆறு மதிப்பெண் பெற்றுள்ளதாக இணையத்தில் வந்த தகவலையடுத்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது அந்த மாணவி பெற்றுள்ள மதிப்பெண் 590 என்று தெரிய வந்துள்ளது.
தி டெலிகிராப்:
- ஜம்மு காஷ்மீரில் எதிரும் புதிருமாக இருந்த பரூக் அப்துல்லா - மெகபூபா முப்தி கட்சிகள் இணைந்து முறையே தலைவராகவும் துணைத்தலைவராகவும் செயல்படவும், பிரிவு 370அய் மீண்டும் மாநிலத்தில் கொண்டு வரவும், அப்போது இருந்த கொடியை தொடர வும் முடிவு செய்துள்ளார்கள்.
- உ.பி. ஹத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் மரணம் பற்றி பிரச்சினை இருக்கும் சூழலில் தற்போது அதே உ.பி.யில் பிரோஷாபாத் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய தாழ்த்தப்பட்ட மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்ததை யடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த மாணவியில் தலையில் அய்ந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
- குடந்தை கருணா
25.10.2020
No comments:
Post a Comment