ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், சென்னை:



  • தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணிதான்; எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்க, தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் முருகன் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்.

  • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து திமுக போராட தயாராக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • பீமா கரோகான் வழக்கில் ஸ்டான் ஸ்வாமி உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA)ன் நீக்கப்பட வேண்டும் என சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • நீட் தேர்வுக்காக எனது ஆதரவும், எதிர்ப்பும் இல்லை. மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுத்தால் எதையும் சாதிப்பார்கள் என தமிழக அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

  • சி.பி.அய். விசாரணையை மகாராஷ்டிராவில் மேற் கொள்ள இனி மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதே போன்ற முடிவை ஏற்கனவே மேற்கு வங்கம், ஆந்திர பிரதேச மாநில அரசுகள் எடுத்துள்ளன.


தி இந்து:



  • பஞ்சாப் மாநிலத்தையடுத்து, ராஜஸ்தானில் அசோக் கேலாட் தலைமையிலான மாநில அரசும் மோடி அரசின் வேளாண் சட்டங்களை நிராகரித்து மாற்று சட்டம் இயற்றிட முடிவு செய்துள்ளது.


- குடந்தை கருணா


22.10.2020


No comments:

Post a Comment