ஜூலையில் உச்சநிலை அடைந்து கரோனா படிப்படியாக குறைகிறது: சுகாதாரத்துறை செயலாளர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

ஜூலையில் உச்சநிலை அடைந்து கரோனா படிப்படியாக குறைகிறது: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை, அக். 22- சென்னை யில் கடந்த இரண்டு தினங் களுக்கு முன் ஏற்பட்ட தக ராறில் மணிப்பூரை சேர்ந்த நபருக்கு இதயத்தில் கத்திக் குத்து விழுந்தது.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை நேற்று (21.10.2020) சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.


பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியார்களிடம்  கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனை உட்பட சில அரசு மருத்துவ மனைகளில் எலித் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் கள் வந்தன. அதை  உடனடி யாக சரி செய்ய வேண்டும் என்று அந்தந்த மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்ட தின் விளைவாக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கடந்த ஆண்டை காட்டி லும் இந்த ஆண்டு டெங் குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள் ளது. அதன்படி கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்தாண்டு 1,800 பேர் மட் டுமே டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டு மழைக்கால  தொற்று நோய்கள் குறைந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலை அடைந்து தற்போது படிப் படியாக குறைந்து  வருகிறது. சென்னையில் சமூக இடை வெளியை கடைபிடிக்காத வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


15 நிமிடங்கள் தொடர்ந்து சமூக இடைவெளி கடைப் பிடிக்காமல் இருந்தால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரும் கண் டிப்பாக  கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண் டும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும்,  கரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி-பி.சி.ஆர் மட்டுமே சிறந்த பரி சோனை முறை. சிடி ஸ்கேன் செய்வதால் கரோனா தொற்றை கண்டறிய  முடியாது. இவ் வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment