செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

செய்தியும், சிந்தனையும்....!

தெரியவில்லை!


தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு.


பெரியாரைப் புகழ்ந்து எப்படிப் பேசலாம் என்று விளக்கம் கேட்க அழைக்கப்பட்டுள்ளாரா? பா.ஜ.க.வில் உள்ளபார்ப்பனப் பிரமுகர்களால் கட்சிக்கு மிகவும் கெட்ட பெயர் என்று புகார் கூறச் சென்றுள்ளாரா என்று தெரியவில்லை.


கருணைக் கண் பார்வை தேவை!


கூடுதல் கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள்மீது நடவடிக்கை: - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.


அரசின் ஆணைகளையும் மீறி கரோனாவைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளை அடிக்கிறார்களே, அதன்மீதும் நடவடிக்கை எடுக்கக் கருணைக் கண்களைப் பாய்ச்சக் கூடாதா?


யார் ராமன்?


யார் லட்சுமணன்?


இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். ராமர் - லட்சுமணர்கள்: - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.


அண்ணன் ராமன் கட்டளையை மீறி மானை வேட்டையாடச் சென்று சீதையைப் பறிகொடுத்தான் லட்சுமணன். இப்பொழுது பதவியைப் பறிகொடுக்கப் போவது யார்?


(முதலமைச்சர் பதவி ரெடியாக இவர்களுக்காகக் காத்துக் கொண்டு இருப்பதுபோல ஒரு கற்பனையா? நல்ல தமாஷ்!)


மனசுக்குள் மத்தாப்பு!


மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை.


தீண்டாமை ஒழிக என்று குடியரசுத் தலைவரும், 'ராமன் வாழ்க', 'சம்பூகன் ஒழிக' என்று  பிரதமரும் மனதுக்குள் சொல்லிக் கொண்டு இருப்பார்களோ!


பொழைச்சிக் கிடக்கணும்!


2020 ஆம் ஆண்டில்தான் தரமான கரோனா தடுப்பூசி கிடைக்கும்: - நிபுணர்கள் கருத்து.


அதுவரை மக்கள் பொழைச்சிக் கிடக்குணுமே!


(ராமஜென்ம பூமிக்கு அடிக்கல் நாட்டியாச்சு - 'ராமன் இருக்கப் பயம் ஏன்?)


பெருமாள் - பெத்த பெருமாள் ஆன கதை!


தேனி  அ.தி.மு.க. எம்.பி., தனது பெயர் ரவீந்திரநாத் குமார் என்பதை ரவீந்திரநாத் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.


பெருமாள் போயி - பெத்த பெருமாள் ஆனக் கதை என்று தந்தை பெரியார் சொன்னதுண்டே - அதுதானா இது?


நேரம் இல்லை


பள்ளிக் கூடங்களைத் திறப்பதுபற்றி முதலமைச்சர் முடிவு செய்வார்: - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.


முதலமைச்சர் பதவி - அடுத்த கட்டம் என்ன என்று முடிவு செய்வதற்கே, அவருக்கு நேரம் போதவில்லை - அதில் இது வேறா?


‘ஸ்வீட்' நியூஸ்!


காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக்கடைக்குப் பதிலாக கோலார் தங்க வயலில் இனிப்புக் கடைக்குச் சீல் வைப்பு.


காந்திப் பெயரைப் பயன்படுத்தி எத்தனையோ தவறுகள் நடந்துகொண்டுள்ளன - அதில் இதுவும் ஒன்று - அவ்வளவுதான்!


No comments:

Post a Comment