பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரும் செல் வந்தர் ஒருவரின் குடும்பத்தில் பிறந்தும், தனது ஜாதியின் காரணமாக கல்வி மறுக் கப்பட்டு மழைக்காக வகுப்பறைக்குள் சென்றதற்காக ஆசிரியர் மற்றும் இதர உயர்ஜாதி மாணவர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளான பாபு மங்கேராம் சவுதிரி என்பவரின் வரலாறு இது.
பிரிட்டிசு இந்தியாவின் பஞ்சாப் மாகாணம், ஹோசியார்பூர் மாவட்டம், முகோவால் கிராமத்தில் உள்ள சாமர் குடும் பத்தில் ஹர்மன் தாஸ் மற்றும் அட்ரிக்கு மகனாக முகோவாலியா பிறந்தார். இவரது தந்தை ஹர்மன் தாஸ் பாரம்பரிய சாமர் ஜாதியின் தொழிலான தோல் பதனிடும் பணியை மேற்கொண்டுவந்தார். தோல் பதனிடும் தொழிலில் இஸ்லாமியர்களுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தோல் வணிகத்தில் அதிக வருவாய் ஈட்டி அப்பகுதியில் செல்வந்தாரா னார். ஹர்மன் தாஸ் செல்வந்தராக இருந்த போதும் உயர்ஜாதியினரால் ஜாதிய பாகுபாட்டை எதிர்கொண்டார். இதனால் தனது மகனும் அதே பிரச்சினைகளை எதிர் கொள்வதை விரும்பவில்லை. ஆகவே தனக்குக் கிடைக்காத கல்வியை தனது மகனுக்குக் கொடுக்க தனது செல்வத்தை செலவழித்தார்.
ஆரம்பத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஒரு கிருஸ்தன போதகர் இவருக்கு ஏழு வயது வரை பாடங்களைக் கற்பித்தார். இவர் முகோவால் பகுதியிலும், அதன் பிறகு தற் போதைய டேராடூன் (உத்திராகண்ட் தலைநகர்) சென்று கிறிஸ்தவ மிசினரி பள்ளிகளிலும் பயின்றார். பெரும்பாலான பள்ளிகளில் இவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட மாணவர் ஆவார். பஞ்சாப் மாநிலம் ஊசியார் பூரில் உள்ள பள்ளியில் படிக்கும் போது இவர் வகுப்பறையின் பின்புறம் அல்லது தனி அறையில் கூட உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திறந்த கதவு வழியாகவே பாடங்களைக் கேட்க வேண்டியிருந்தது. இவர் அதன் பிறகு பஜ்ரா என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இவர் கட்டிடத் திற்கு வெளியே இருந்து ஜன்னல் வழியாக வகுப்புகளைக் கவனிக்க வேண்டியிருந்தது.
ஒருமுறை இவர் ஒரு கனமான ஆலங்கட்டி மழையின் போது உள்ளே வந்தபோது, பார்ப்பன ஆசிரியர் இவரை அடித்தார். அவருடன் சேர்ந்து இதர உயர் ஜாதி மாணவர்களும் அவரைத் தாக்கினர். இவர் வகுப்பறைக்குள் நுழைந்ததால் பள் ளியே தீட்டாகிவிட்டது என்று கூறி இவ ரையும் இவரது உறவினரையும் அழைத்து பள்ளியில் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களையும் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்று தண்டனை கொடுத்தது பள்ளி நிர்வாகம். இருப்பினும் இவர் வகுப்பி லேயே தலைசிறந்த மாணவராகத் திகழ்ந்தார். ஒரு சிறந்த மாணவரான, இவர் தொடக்கப் பள்ளியில் தனது வகுப்பில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். மற்ற மாணவர்கள் உயர் கல்வியைக் கற்க ஆசிரியர்களால் பரிந்துரை செய்யப்பட் டார்கள். இவர் பள்ளியை விட்டு வெளி யேறவும், மாடுமேய்க்க வும் பருத்தி வயலில் கூலிக்கு பருத்தி பறிக் கவும் ஆசிரியர்களால் வற்புறுத்தப் பட்டார்.
இந்த நிகழ்வால் அவர் கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரின் பரிந்துரையில் டேராடூன் சென்று மிசினரி பள்ளியில் கற்க ஆரம்பித்தார். அங்கு இவரது கல்வித் திறனைக் கண்ட தலைமை ஆசிரியர் அவரை மேற்கல்வி கற்க அமெரிக்கா அனுப்பி படிக்க வைக்குமாறு அவரது தந்தையிடம் கூறினார். அதன் பிறகு அவரது தந்தையும் அவரை அமெரிக்கா சென்று படிக்க லண் டன் சென்று அங்கிருந்து நியூயார்க் செல்லத் துணையாக இருந்தார். அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பை முடித்து அங்கேயே சமூக நலப்பணிகளை மேற்கொண்டார், அவர் அங்கு வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அமைப்புகளுக்கு ஆலோசகராக இருந்தார். 1909 ஆம் ஆண்டு தனது குடும் பத்தினரையும் அமெரிக்கா அழைத்துக் கொண்டார். ஆனால் அமெரிக்காவை விட இந்தியாவில் தான் தனது பணி அதிகம் என்று கூறி 1925 இல் இவர் இந்தியாவுக்குத் திரும்பினார். இந்தியாவிற்கே திரும்பி தனது சமூக மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதே எனது குறிக்கோள் என்று கூறி அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு, இவர் தனது சொந்த கிராமமான முகோவா லில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார்.
அதற்கு இவர் ஆத் தர்மப் பள்ளி என்று பெயரிட்டார். ஆத் தர்ம இயக்கத்தை முறையாக ஆரம்பித்தது இவர் முதன் முதலில் படித்த அதே பள்ளியில்தான். இயக்கத்தை நிறுவுவது என்பது பார்ப்பன சமுதாயத்திற்கு எதிரான குரலாக இருந்தது. இது ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் சமு தாயத்தில் சமத்துவத்தை அடைவதற்கு மகத்தான நடவடிக்கை. ஆத் தர்ம இயக்கம் மூலம், இவர் வட இந்தியாவில் ஒடுக்கப் பட்ட மக்கள் இயக்கத்திற்கு முன்னோடி யாக இருந்தார்.
ஜாதிய அடக்குமுறையில் இருந்து மக் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றார். இவர் இந்தியாவிற்குத் திரும் பியதும் உயர்ஜாதியினரின் கடு மையான அடக்குமுறைக்கு ஆளானார், இவரது இயக்கச் செயல்பாடுகள் புதியதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருந்தன. ஒடுக் கப்பட்ட மக்களுக்கு உரிமைகளைமீட்டுத் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் கள் அனுபவித்து வந்த ஜாதிய அடக்கு முறைகளை மறந்துவிட்டதால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், உணரவும் மங்கே ராம் தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டார். இது ஒடுக்கப்பட்ட மக் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது இதனால் தங்களின் குழந்தைகளுக்குக் கூட மங்கே ராம் மங்கு ராம், ராம் சவுதிரி முகோலியா ராம் என்று பெயர் வைத்தனர். இவர் 1946 இல் பஞ்சாப் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 ஆம் ஆண் டில் ஓய்வூதியமும், இந்திய சுதந்திரத்தில் தனது பணிக்காக பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து ஒரு விருதும் பெற்றார். உடல் நலிவுற்று 22 ஏப்ரல் 1980 அன்று இவர் மறைவுற்றார்.
அண்ணல் அம்பேத்கர் எழுதிய ஜாதியை ஒழிக்கும் வழி என்ற கட்டுரையை பஞ்சாபி மற்றும் உருது மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அந்தப் பிரதிகளைக் கூட யாரிடமும் கொண்டு சேர்க்கவிடாமல் உயர்ஜாதியினர் மிகவும் கடுமையான மிரட்டல் விடுத்து, அதை கொண்டுசெல்பவர்களைத் தாக்கவும் செய்தனர். ஆகையால் நீண்ட காலமாக அந்த மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மக்களிடையே கொண்டு செல்லாமல் அவரது வீட்டிலேயே கட்டு கட்டாகக் கிடந்தது. ஆனால் தந்தை பெரியார் அண் ணல் அம்பேத்கர் எழுதிய "Annihilation of caste" அடுத்த ஆண்டே (1937) தமிழில் மொழிபெயர்ப்பைத் தனது குடிஅரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டு மக்க ளிடையே கொண்டு சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் "மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி" என்ற தொடர் பொழிவின் ஏழாம் பகுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர்
அவர்கள் உரையாற்றியபோது இவர் பற்றி யும் உரையாற்றினார்.
No comments:
Post a Comment