சென்னை, அக். 24- வேகமாக வளர்ந்து வரும் சிறு நிதி வங்கிகளில் ஒன்றான சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, நோய்த்தொற்று காலத்தில் மாணவர்களின் டிஜிட்டல் கல்வியை எளிதாக்குவதற்காக டேப்லட்கள் வழங்கும் அசீபா தொண்டு நிறுவனத்தின் "கனவு" முயற்சிக்கு ஆதரவளிப்பதாக தனது உறுதிமொழியை அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வாட்சாப், கூகுள் மற்றும் யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்துள்ள அசீபா அறக்கட்டளை, இந்த ஆன்லைன் கற்றல் முறைக்கு கதிர் திட்டம் என்று பெயரிட்டுள்ளன. இந்த முயற்சியை ஆதரிப்பதற்காக, சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி கடலூர் மாவட்டத்தின் கன்னரப்பேட்டை மற்றும் கில்லை கிராமங்களில் உள்ள சர்வ சேவா மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு டேப்லட்டுகள் வழங்கப் பட்டன.
இது குறித்து இவ்வங்கியின் நிர்வாக அதிகாரி பாஸ்கர் பாபு கூறுகையில்: எங்கள் சமூகப் பொறுப்பு கடமையின் ஒரு பகுதியாக நாங்கள் மேற்கொள்ளும் இந்த முன்முயற்சிகள் மூலம் மக்களுக்கு ஒரு புன்னகையைத் தருவது எங்கள் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment