இந்தியன் வங்கியின் மேனாள் தலைவரும், தலை சிறந்த மனித நேயருமான திரு. எம்.கோபாலகிருஷ்ணன் (வயது 86) அவர்கள் நேற்றிரவு (30.9.2020) சென் னையில் உடல் நலக் குறைவி னால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தோம்.
அய்யா திரு. கோபால கிருஷ்ணன் அவர்கள் தன் பிற் படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து அவ்வளவு உயர்ந்த பதவிக்கு உழைப்பில், ஆற்றலில் உயர்ந் தவர். எவருக்கும் இரக்க உள்ளத் தோடு உதவும் தாராளமான சிந்தனை உடைய சிறந்த பண் பாளர். இதன் காரணமாகவே அவர் அழி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட நிரபராதியுமாவார்.
அமைதியும், அடக்கமும் சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கையும் உடைய அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கே மிகப் பெரியதோர் இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அந்த தொண்டறச் செம்மலான தூயவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
1.10.2020
No comments:
Post a Comment