தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை தவிர்த்து, அமைக்கப்பட்ட கூண்டை அகற்றுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை தவிர்த்து, அமைக்கப்பட்ட கூண்டை அகற்றுக!

தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்துக் கட்சியினர் மனு



தஞ்சை, அக். 14- தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை தவிர்த்து, அமைக்கப் பட்ட கூண்டை அகற்றக் கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பா ளரிடம் அனைத்துக் கட்சியினர் மனு அளித்தனர்.



சமூக விரோதிகளால் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப் படுவதை காரணம் காட்டி-குற்றவாளி களின் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து கடும் தண்ட னைக்கு உள்ளாக்க வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் 95 வயது வரையிலும் திராவிட இனத்தின் மீட் சிக்காக ஓயாது உழைத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையை கூண்டில் அடைத்து மக்கள் தலைவரை வெகுஜன விரோதி போல சித்தரிப்பது ஏற்க முடியாது, பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை கைவிட வேண் டும், ஒரு சில இடங்களில் அமைக் கப்பட்டுள்ள கூண்டுகளை உடனடி யாக அகற்ற வேண்டும் என வழியு றுத்தி தஞ்சை மாவட்ட திமுக செய லாளர், திருவையாறு சட்டமன்ற உறுப் பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தி.மு.க செயலாளர் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், ஆகி யோர் தலைமையில் 13-.10.-2020 அன்று முற்பகல் 11.30 மணியளவில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகி யோரிடம் தஞ்சை மாவட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனு வையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையும், இணைத்து வழங்கப்பட்டது


மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஆலோ சனை செய்து கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.


இருவருக்கும் 'விடுதலை' ஆண்டு மலரும், பெரியார், ஆசிரியர் புத்தகங் கள் வழங்கப்பட்டன


பின்னர் அங்கு கூடி நின்ற செய்தி யாளர்களிடம் மேற்கண்ட காரணங் களுக்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம், கூண்டை அகற்று வதாக உறுதி அளித்துள்ளனர், தவ றினால் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என உங்கள் மூலமாக தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என கழகப் பொதுக் செயலாளர் இரா.ஜெயக் குமார் தெரிவித்தார்


நிகழ்வில்  திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ.அருணகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக் காரவி, இந்திய மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொரு ளாளர் பாலசுப்ரமணியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செய லாளர் ஜெயினுல் ஆபீதின், இந்திய ஜன நாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஆஸ்டின், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் நாத் திகன், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் செல்ல.கலைவாணன், மாநகர திமு.க துணைச் செயலாளர்ஆர்.கே.நீலகண்டன், மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப் பாளர் சன்.இராமநாதன், தொழிலா ளர் முன்னணி மாவட்ட அமைப் பாளர் யோகராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மாயன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டத் துணைத் தலைவர் தியாகராசன், மாநில திக இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக் குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண் டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இரா மலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மெடிக்கல் பகுதி செய லாளர் கோவிந்த ராசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமிவாண்டை யார், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கோ.உதயக்குமார், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆகியோர் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டு ஆதரவை தெரிவித்தனர்


விசிறி சாமியார் சார்பில் மனு


விசிறிசாமியார் முருகபக்தர் முரு கன் அடிகளார் சார்பில் பெரியார் சிலையை கூண்டிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தனியாக கோரிக்கை மனுவை அதி காரிகளிடம் அளித்தனர்.


No comments:

Post a Comment