பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு சிபிஅய் விசாரணை தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 6, 2020

பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு சிபிஅய் விசாரணை தேவை

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சென்னை,அக்.6 தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.அய்.) விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.


அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது: பிரதமரின் கிசான் திட்டத்தில் இடைத்தரகர்கள்மூலம் கடுமையானமுறை கேடுகள் நடந்துள்ளன. செப் டம்பர் 15,2020 வரை சரிபார்க்கப்பட்ட 5.95 லட்சம் பயனாளி களின் கணக்குகளில், 5.38 லட்சம் பய னாளிகள் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. முதல்வரது சொந்த மாவட்டத்தில் மட்டும் 10,700 போலி நபர்கள் விவசாயிகள் என்ற பெயரில் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.


அங்கொன்றும், இங்கொன்றுமாக சிலர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமான தாக இல்லை. இது, கண்துடைப்பு நடவடிக்கை யாகவே தெரிகிறது. 110 கோடி ரூபாய் கிசான் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்ற வாளிகளைக் கைது செய்யாமல் இருப்பது பற்றி தி.மு.க சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் இவ்விசாரணையை சி.பி.சி.அய்.டியிடம் இருந்து சி.பி.அய்க்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment