புதிய கல்விக் கொள்கை குறித்து இணையவழிக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

புதிய கல்விக் கொள்கை குறித்து இணையவழிக் கலந்துரையாடல்

கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு



சென்னை, அக். 3- புதிய கல்விக் கொள்கை குறித்த இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (அக்.4) வரை நடைபெறவுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின், அனைத்து பல் கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது:


புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அதை செயல்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து பல்வேறு தரப் பினருடன் மத்திய அரசு சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.


இதுதவிர கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான இணையவழியிலான கலந்துரையா டல் (<https://innovateindia.mygov.in/nep2020-citizen/>) நேற்று முன்தினம் தொடங்கியது. இது நாளை (அக்.4) வரை நேரலையாக நடைபெறுகிறது.


இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களும் பெரிய அள வில் விளம்பரம் செய்து கல்வியாளர் களின் கருத்துகள் மற்றும் பரிந்து ரைகளை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment