சினோவாக் கோவிட் -19 தடுப்பூசி வய தானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என கண்டறிந்துள்ளனர்.
சீன நிறுவனமான சினோவாக் பயோ டெக் லிமிடெட் கண்டுபிடித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பூசி வயதானவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகால முடி வுகள் முதல் தற்போதையை முடிவுகளின் படி, தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திகள் இளையவர்களைவிட முதியவர்களிடம் குறைவாக இருந்தன.
இதனால் இத்தகைய தடுப்பூசிகள் வயதானவர்களுக்கு பாதுகாப்பாக இருக் குமா என்று சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருந்தனர். மேலும் நோயெதிர்ப்பு அமைப்புகள் பொதுவாக தடுப்பூசிகளின் தாக்கத்தால் மெதுவாகவே வலுப்பெறும்.
கரோனா வைரசுக்குத் தடுப்பு மருந் தைக் கண்டுபிடித்த மே மாதம் சோதனை-முதல் மற்றும் 2ஆம் கட்டமாக மேற்கொள் ளப்பட்டது. இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை, இந்த சோதனையில் ஆரோக்கியமான 60 வயதிற்கும் குறைந்த 421 பங் கேற்பாளர்கள் பங்கேற்றனர் என்று சினோ வாக்கின் ஊடக பிரதிநிதி லியு பீச்செங் "ராய்ட்டர்ஸி"டம் தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட சோதனைகளில் இருக் கும் உலகின் எட்டுத் தடுப்பூசிகளில் நான்கு சீனாவிலிருந்து வந்தவை.
பங்கேற்பாளர்களின் மூன்று குழுக்க ளுக்கு முறையே குறைந்த, நடுத்தர மற்றும் உயர் அளவிலானவர்களைத் தேர்ந்தெ டுத்து மருந்தைச் செலுத்தி சோதனை செய் ததில் அவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சில வயதானவர்களுக்கு இளை ய வர்களைவிட நோய் எதிர்ப்பு சக்தி சற்றுக் குறைவாக இருந்தது. ஆனால் இது எதிர் பார்த்ததை விட குறைவாகவே இருந் தது என நிறுவன ஊடகபிரதிநிதி கூறினார்.
வெகுமக்கள் பயன்பாட்டிற்கான ஒழுங்கு முறை ஒப்புதல்களைப் பெறு வதற்கு இது பயனுள்ளதா, பாதுகாப்பானதா என்பதை மதிப்பிடுவதற்கான இறுதிக் கட்ட மனிதச் சோதனைகளில் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் சோதனை செய்யப் படும் மருந்து ஏற்கெனவே பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் 90 சதவிகிதம் சினோவாக் நிறுவனம் தனது ஊழியர்கள் உள்பட அவர் களின் குடும்பத்தினரையே சோதனைக்கு பயன்படுத்தியுள்ளது. இது அதிக தொற்று அபாயத்தை எதிர்கொள் ளும் மக்களைப் பாதுகாப்பதற்கான சீனா வின் அவசரகால தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டது.
தற்போது கரோனா தடுப்பூசி மூன்று ஆண்டுகள் வரை கையிருப்பில் உள்ளதாக கூறும் சினோவாக் நிறுவனம், சேமிப்பு வசதிகள் இல்லாத நாடுகளுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் இந்த தடுப்பூசி 25 செல்சியஸ் (77'F), 28 நாள்கள் 37' (98.6'F), மற்றும் அய்ந்து மாதங்கள் 2-8 (35.6-46.4'F) இவற்றை பாதுகாப்பாக கையிருப்பில் வைக்கலாம் என்றும் என்று லியு கூறினார்.
No comments:
Post a Comment